சர்க்கரை, கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள பானம்: 2023 முடிவில் புதிய நிபந்தனைகள்

சர்க்கரை, கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள பானம்: 2023 முடிவில் புதிய நிபந்தனைகள்

2 mins read
7514a30a-35e3-432a-9112-382126e795a7
-

அதிக அளவு சர்க்­கரை, கெட்ட கொழுப்பு ஆகி­ய­வற்­று­டன் கூடிய பானத்தை உட­னுக்­கு­டன் தயா­ரித்து விற்­கும் கடை­கள் புதிய நிபந்­தனைகளை அடுத்த ஆண்டு இறுதி வாக்­கில் நிறைவேற்­ற­வேண்­டிய தேவை இருக்­கும்.

தாங்­கள் தயா­ரித்து விற்­கும் பானத்­தில் சர்க்­கரை அளவு என்ன, உறைந்த கொழுப்பு, (கரை­யாத கெட்ட கொழுப்பு) எந்த அள­வுக்கு இருக்கும் என்­பதை அவை சத்துத் தர அள­வீட்­டுக் குறிப்­பில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

உட­னுக்­கு­டன் தயா­ரித்து விற்­கப்­படும் காப்பி, பழச்­சாறு, தேநீர் போன்ற பானங்­கள் இவற்­றில் அடங்­கும். சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் இந்த விவரங்­களை அறி­வித்­தார்.

டப்­பி­களில் அடைத்து விற்­கப்­படும் அதிக சர்க்­கரை, உறைந்த கொழுப்பு உள்ள பானங்­களில் சத்துத் தர அள­வீட்டு குறி­யீ­டு­கள் இருக்க வேண்­டும் என்ற விதி இந்த ஆண்டு டிசம்­பர் 30ஆம் தேதி நடப்­புக்கு வரும்.

இதை­ய­டுத்து அடுத்த ஆண்டு முடி­வில் புது விதி நடப்­புக்கு வரும்.

அதிக சர்க்­கரை, கெட்­ட கொழுப்பு இருக்­கும் பானத்தை உட­னுக்­கு­டன் தயா­ரித்து விற்­கும் கடை­கள், அத்­த­கைய பானத்­தைப் பிர­ப­லப்­ப­டுத்த விளம்­ப­ரம் செய்ய முடி­யாது என்­றார் அமைச்­சர்.

அர­சாங்­கம் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் வெளி­யிடு­வ­தன் தொடர்­பில் செயல்­பட்டு வரு­கிறது.

நீரி­ழிவு நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் வெற்­றி­யைச் சாதிக்கும் வகை­யில், மக்­கள் உண­வில் சர்க்­கரை அளவை குறைத்­துக்கொள்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த அர­சு பல முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

அந்த முயற்­சி­க­ளின் ஒரு பகுதி­யாக இந்­தப் புதிய விதி­கள் நடப்புக்கு வரு­கின்­றன.

அர­சாங்­கம், 'நல­மிக்க எஸ்ஜி' என்ற சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உரு­மாற்ற உத்­தியைக் கைக்­கொண்டு வரு­கிறது. நோய்­களை வரு­முன் காத்­துக்­கொள்­ளும் அணு­கு­முறை அந்த உத்­தி­யின் அங்­க­மாக இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொரு நாளும் ஆறு பேருக்குச் சிறு­நீ­ர­கம் கெட்டுப் போய்­வி­டு­கிறது. இந்த எண்­ணிக்கை 2011ல் நாள் ஒன்­றுக்கு ஏறக்­கு­றைய நான்­காக இருந்­தது.

சிறு­நீ­ர­கம் செய­லி­ழந்­துப் போவ­தற்கு முக்­கி­ய­மாக இரண்டு கார­ணங்­கள் இருக்­கின்­றன. ஒன்று வயது. மற்­றொன்று நீரி­ழிவு நோய்.

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை மூப்­படைந்து வரு­கிறது. பல ஆண்டு கால­மா­கவே நீரி­ழிவு குறைந்­த­பாடில்லை. நீரி­ழிவு நோய்க்கு உடல் பரு­மன் முக்­கி­ய­மான கார­ணம். இந்த உடல் பரு­மன் பிரச்­சினை அதி­க­ரித்து வரு­கிறது என்று திரு ஓங் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் முதல் தட­வை­யாக அனைத்­து­லக ரத்த சுத்­தி­க­ரிப்பு பேரவை 2022 கூட்­டம் நடக்­கிறது. அதை தொடங்கி வைத்து அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

புதிய சிறு­நீ­ரக நோயா­ளி­களில் 30 விழுக்­காட்­டி­னர் தங்­கள் வீடு­களி­லேயே சொந்­த­மாக ரத்­தத்­தைச் சுத்­தி­க­ரித்­துக்கொள்­ளும் வச­தியை 2025ஆம் ஆண்டு வாக்­கில் ஏற்­படுத்த வேண்­டும் என்­பது அமைச்சின் இலக்­காக இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.