பொது இடத்தில் தொந்தரவு: இளைஞர் மீது குற்றச்சாட்டு

பொது இடத்தில் தொந்தரவு: இளைஞர் மீது குற்றச்சாட்டு

1 mins read
4fd87b77-6565-4f8f-b988-127f726785dc
படம்: ஸ்டோம்ப் -

எஸ்ரா ஜித் சிங், 19, என்ற இளைஞர், எம்ஆர்டி ரயிலில் ஓர் ஓரத்தில் இருக்கும் முதியவருக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இஸ்மாயில் முகம்மது தவான் என்பவரிடம் சட்டாம் பிள்ளைத்தனமாக நடந்துகொண்டு கோழை என்று சொல்லும்படி அவரை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த முதியவரின் தாயார் பற்றி தவறாக அந்த இளைஞர் பேசியதும் அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி மூலம் தெரிந்தது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11 மணிக்கு பாய லேபார் ரயில் நிலையத்திற்கும் கெம்பங்கான் நிலையத்திற்கும் இடையில் ரயிலில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் நேற்று சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு கூறுகிறது.