இரைச்சல்: தேசிய நெறிமுறை உருவாக உதவும் உரையாடல் 53 பேர் கலந்துகொண்டு கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவித்தனர்

தேசிய வளர்ச்சி அமைச்­சில் நேற்று நடந்த இரைச்சல் தொடர்பான எட்டா­வது குழு கலந்துரையாடலில் 53 பேர் கலந்­து­கொண்­ட­னர். 20 வயது முதல் 70க்கும் அதிக வயதுள்ள அவர்களில் 10 பேரில் எட்­டுப் பேர் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்கு­மாடி வீடு­களில் வசிப்­ப­வர்­கள்.

அவர்­கள் தெரி­வித்த கருத்­து­களும் யோச­னை­களும் புதிய ஒரு தேசிய வழி­காட்டி நெறி­மு­றை­களை உரு­வாக்க பயன்­ப­டுத்­தப்­படும்.

அக்­கம்­பக்­கத்­தில் எந்த அளவு வரைப்­பட்ட இரைச்­சலைச் சகித்­துக்­கொள்­ள­லாம்; சகித்­துக் கொள்ள இய­லாத இரைச்­சல்­கள் எந்த அள­வுக்கு இருக்­கும் என்பதை தெளி­வுப­டுத்­தும் அந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் இந்த ஆண்டு இறு­தி­யில் தயா­ரா­கி­வி­டும்.

அரு­க­ருகே வசிப்­ப­வர்­கள் ஏற்­படுத்­தக்­கூ­டிய அள­வுக்கு அதிக இரைச்­ச­லால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்சினை­க­ளை­யும் காப்­பிக்­க­டை­கள், கூடைப்­பந்து விளை­யாட்டு இடங்­கள் போன்­ற­வற்­றில் இருந்து ஏற்­ப­டக்­கூ­டிய இரைச்­சல் பிரச்­சினை­யை­யும் கையா­ளு­வ­தற்­காக இந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் சமூக ஆலோ­ச­னைக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் கருணை இயக்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் வில்­லி­யம் வான் அந்­தக் குழு­விற்­குத் தலைமை ஏற்­கி­றார்.

சமூ­கம், கல்­வித் துறை ஆகி­ய­வற்றை பிர­தி­நி­தித்­தும் பொது­மக்­களைப் பிர­தி­நி­தித்­தும் அந்­தக் குழு­வில் ஒன்­பது பேர் உள்ளனர்.

அந்­தக் குழு­வுக்கு கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சும் மாந­கர் சேவை அலு­வ­ல­கம் என்ற அமைப்­பும் உத­வு­கின்­றன.

இப்­போ­தைய இரைச்­சல் இல்லா நேர­மான இரவு 10.30 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தை மாற்றி அமைப்பதன் தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்டு இருக்கும் பரிந்­து­ரை­களை அந்­தக் குழு ஆராய்ந்து வரு­கிறது.

வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் நேற்­றைய கலந்துரையாடலில் பங்கேற்றார். அக்­கம்­பக்­கத்­தி­னர் ஏற்­ப­டுத்தும் இரைச்­சல் தொடர்­பான கருத்­து­கள், புகார்கள் கடந்த இரண்­டாண்டு­களில் அதி­க­ரித்து இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

கொவிட்-19 தொற்று காரணமாக பல­ரும் வீடு­களில் இருந்து பணி­யாற்­று­வ­தால் அந்த அதி­கரிப்பு இடம்­பெற்று உள்­ளது என்றார் அவர். சிங்­கப்­பூர் போன்ற மக்­கள் நெருக்­க­மாக வாழும் சூழ­லில், அக்­கம்­பக்­கத்­தில் ஏதோ ஓர் இரைச்­சலை அனு­ப­விப்­பது என்பது வழக்­க­மான ஒன்­றா­கத்­தான் இருக்­கும் என்­று­ அ­வர் கூறி­னார்.

ஆனால் அதிக உறுப்­பி­னர்­களைக்கொண்ட குடும்­பங்­கள், பின்­னி­ரவு நேரத்­தில் மஜோங் விளை­யாட்­டில் ஈடு­ப­டு­வது போன்ற செயல்­களை அமைதி விரும்­பி­கள் பொது­வாக ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள் என்­றார் அவர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 28 முதல் நடந்து வரு­கிறது. அவற்றில் 280 பேர் கருத்து­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு உள்ளனர்.

இணை­யம் வழி நடத்­தப்­பட்ட ஆய்வு மூலம் 1,300க்கும் மேற்­பட்ட மக்­கள் கருத்­து­க­ளைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

இரைச்­சல் இல்­லாத நேரத்தை உறு­திப்­ப­டுத்­து­வதே கலந்துரை யாடல்களின் முக்­கிய கருப்­பொரு­ளாக இருந்துள்ளது என்­றார் அவர்.

அதா­வது, அதிக இரைச்­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சமூ­கக் கூட்­டங்­கள், கொண்­டாட்­டங்­கள், விளை­யாட்­டு­கள் ஆகி­யவை இரைச்­சல் இல்லா நேரம் என்று வரை­ய­றுக்கப்­படும் நேரத்­தில் இடம்­பெ­ற முடியாது என்­பதே இதற்­கான பொருள்.

தெம்­ப­னிஸ் நார்த்­தில் வீவக புளோக்­கில் வசிக்­கும் ஸ்டீ­வன் இயோ, 63, என்ற அடித்­தள அமைப்­புத் தலை­வர், ஐந்து ஆண்­டு­களுக்கு முன் தனக்கு நேர்ந்த அனு­ப­வத்­தை நேற்றைய கலந்துரை யாடலில் பகிர்ந்­து­கொண்­டார்.

தன் வீட்­டுக்கு மேலே உள்ள வீட்­டில் வசித்­த­வர், இரவு நேரத்­தில் இரைச்­சலை கிளப்­பி­ய­தால் தான் சங்­க­டப்­பட்­ட­தா­க­வும் ஆனால் மேல் வீட்­டில் வசித்­த­வ­ருக்குப் புற்று­நோய் ஏற்­பட்­ட­தன் கார­ண­மா­கவே வலி தாங்க முடி­யா­மல் அவர் அவ்­வாறு இரைச்­ச­லைக் கிளப்­பி­னார் என்­பது தனக்குத் தெரி­ய­வந்­த­தா­க­வும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!