தாய்லாந்து சாலை விபத்தில் சிங்கப்பூர் மாது பலி

தாய்லாந்து சாலை விபத்தில் சிங்கப்பூர் மாது பலி

1 mins read
3882c52c-6dca-40b2-b3bb-6b96cf6a5739
விபத்தில் கார் இந்த கதியானது. படம்: தி பட்டாயா நியூஸ் -

தாய்­லாந்­தின் புக்­கெட் நக­ரில் நிகழ்ந்த சாலை விபத்­தில் சிங்­கப்­பூ­ர­ரான மாது ஒரு­வர் கொல்­லப்­பட்டார். அவர் சென்று கொண்­டிருந்த கார், ஒரு சிறிய சுற்­று­லாப் பேருந்­து­டன் மோதி விபத்­துக்­கு உள்ளானது.

மியாங் மாவட்­டத்­தில் சனிக்­கிழமை இரவு 10.50 மணிக்கு அந்த விபத்து பற்றி தங்­க­ளுக்­குத் தகவல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது என்று பேங்­காங் போஸ்ட் செய்­தித்­தாள் குறிப்­பிட்­டது.

சம்­ப­வம் நிகழ்ந்த இடத்­திற்கு காவல்­துறை அதி­கா­ரி­களும் மீட்­புப் பணி ஊழி­யர்­களும் விரைந்­த­னர்.

அங்கு ஒரு டொயோட்டா கார் மிகவும் சேதம் அடைந்து கிடந்­தது. ஒரு சிறிய பேருந்­தின் கண்­ணா­டி­யும் உடைந்து இருந்­தது. குமாரி ரீனி ஹொ ஜியா ஹுய், 21, என்ற மாது சுய­நி­னைவை இழந்த நிலை­யில் அங்கு காணப்­பட்­டார்.

மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்ட வழி­யில் அந்தப் பெண் மாண்டு­விட்­டார். அவ­ரு­டன் காரில் பய­ணம் செய்த இதர நான்கு சிங்­கப்­பூ­ரர்­களும் காயம் அடைந்­த­னர்.

விபத்­தில் சிக்­கிய பேருந்தை ஓட்­டிச் சென்ற தாய்­லாந்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரும் பேருந்­தில் இருந்த இரண்டு சுற்­றுலா வழி­காட்­டி­களும் காய­ம­டைந்­த­னர். வழி­காட்­டி­களில் ஒரு­வர் தாய்­லாந்­தைச் சேர்ந்­த­வர். மற்­றொரு­வர் தென்கொரி­யர் என்று தெரி விக்கப்பட்டது.

காய­ம­டைந்த அனை­வ­ரும் மருத்து­வ­மனை கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அந்­தச் செய்­தித்­தாள் மேலும் தெரி­வித்­தது.

குமாரி ஹொ காரை ஓட்­டிச் சென்­ற­தா­க­வும் ஒரு சரிவில் கார் சென்­ற­போது அவர் கட்­டுப்­பாட்டை இழந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­தது. புலன்­வி­சா­ரணை தொடர்­கிறது.