தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொஞ்சம் மது குடித்துவிட்டு ஓட்டினாலும் பிரச்சினைதான்

2 mins read
05ce38f9-75c0-4b75-953f-751bf05cf2c9
-

சிங்­கப்­பூ­ரில் குடித்­து­விட்டு போதை­யில் வாக­னம் ஓட்­டிச்­சென்ற­தால் ஏற்­பட்ட சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஐந்து ஆண்­டு­களில் அதிக ஏற்ற இறக்கம் இல்­லா­மல் இருந்து வந்­துள்­ளது.

அத்­த­கைய விபத்­து­கள் ஆண்டுக்கு 150 முதல் 176 வரை நிகழ்ந்­துள்­ளன.

கடந்த 2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது சென்ற ஆண்டில் குடி­போ­தை­யில் வாக­னம் ஓட்­டிச் சென்­ற­தால் ஏற்­பட்ட சாலை விபத்து­க­ளின் எண்­ணிக்கை கொஞ்­சம் கூடி 152 ஆகி­யது.

இத­னி­டையே, போதைப்­பொருளுக்கு, மது­பா­னத்­திற்கு, சூதாட்­டத்­திற்கு அடிமையாகி பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­குச் சிகிச்சை அளித்து உத­வும் 'விகேர் சமூக சேவை' என்ற அமைப்பு, வாகனத்தை நிதா­ன­மாக ஓட்ட முடியாமல் தள்­ளா­டும்­போ­து­தான் தங்­க­ளுக்­குப் போதை ஏறி­விட்­டது என்று பெரும்­பா­லா­ன­வர்­கள் நினைக்­கி­றார்­கள் என்­றது.

ஆனால், அத்­த­கைய அறி­குறி தெரி­யா­மல் இருந்­தா­லும் குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டு­வது பிரச்­சி­னை­தான் என்று இந்த அமைப்பு விளக்கியது. கொஞ்ச மாக குடித்­தா­லும் ஆபத்து உண்டு என்று அது தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில், ஒரு­வர் எவ்­வளவு குடிக்க முடி­யும், எவ்­வ­ளவு நேரத்­தில் ஒரு­வ­ருக்­குப் போதை ஏறும் என்­பது பல்வேறு அம்­சங்களைப் பொறுத்­தது என்று மவுண்ட் எலி­ச­பெத் நொவினா மருத்­து­வ­ம­னை­யின் வயிற்று நோய் சிகிச்சை வல்­லு­நர் டாக்­டர் டெஸ்­மண்ட் வாய் கூறி­னார்.

பொது­வாக பெண்­களை­விட ஆண்­கள் அதி­கம் மது­பா­னம் குடிக்க முடி­யும். ஆண்­க­ளை­விட பெண்­கள் உட­லில் தண்­ணீர் விகி­தாச்­சா­ரம் குறை­வாக இருக்­கும் என்­பதே இதற்­கான கார­ணம்.

மது (ஆல்­க­ஹால்) இரத்த ஓட்டத்­தில் தண்­ணீ­ரு­டன் கலந்துதான் உடல் எங்­கும் செல்­லும். ஆகை­யால் உட­லில் அதிக தண்ணீர் இருந்­தால் மது அதி­க­மாக நீர்த்­துப்­போ­கும்.

உட­லில் மது மூலக்­கூறைப் பிரிக்­கக்­கூ­டிய ஒரு­வகை நிறமற்ற திர­வம் (என்­சைம்) பெண்­கள் உடலில் குறைவாகவே சுரக்கும்.

ஒரு­வ­ருக்கு வயது ஆக­ஆக மது மூலக்கூறைச் சிதைத்து பிரிக்கும் ஆற்றல் அவ­ரின் உடலில் குறைந்துகொண்டே வரும். மதுபானத்தை அவ­சர அவ­ச­ர­மாக 'மடக்­ம­டக்' என்று குடித்­தால் உட­லில் மதுவின் அடர்த்தி அதி­க­மா­கும்.

சாப்­பிட்ட பிறகு குடித்­தால், வெறும் வயிற்­றில் குடிப்­ப­தை­விட மெது­வா­கவே மது உட­லில் சேரும். கல்­லீ­ரல் பிரச்­சினை இருப்­போ­ரின் உட­லில் மது­வின் மூலக் கூறு சிதைந்து இரத்தத்தில் கலப் பது மிக­வும் மெது­வா­கவே நடக்­கும் என்று அவர் விளக்­கி­னார்.

இத­னி­டையே, ஒரு நிறு­வனத்தின் உரி­மை­யா­ளர் 2020ஆம் ஆண்­டில் குடித்­து­விட்டு வாடகை கார் ஒன்றை ஓட்­டிச் சென்­றார்.

கேலாங்­கில் சாலை­யோர புதரில் அவர் வாக­னத்தை மோதி­விட்­டார். அவர் கையில் சிராய்ப்புக் காயம் ஏற்­பட்­டது.

அதைப் பார்த்த வேறு ஒரு­வர் அது பற்றி காவல்­து­றைக்குத் தகவல் கொடுத்­தார்.

அதை­ய­டுத்து அந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அவர் எச்­ச­ரிக்­கப்­பட்­டார்.

வாட­கை காருக்கு $40,000 அள­வுக்­குச் சேதம் ஏற்­பட்­டு­விட்­டது. இந்­தச் சம்­ப­வத்தை அடுத்து அந்த நிறு­வன உரி­மை­யா­ளர், 'இனி ஒரு போதும் குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டப் போவ­தில்லை' என்று முடிவு செய்­து­விட்­டார்.

"உயிர் தப்­பி­யதே பெரும் புண்ணி­யம். இனி­மேல் விஷப்­பரிட்­சை­யில் இறங்­க­மாட்­டேன்," என்று அவர் உறு­தி­பட தெரி­வித்து­விட்­டார்.