இந்தியா, மலேசிய உள்பட 13 நாடுகளுடன் கூட்டுப் பயிற்சி மேற்கொண்ட சிங்கப்பூர் ஆயுதப் படை

1 mins read
8f663ea0-ae74-48cf-82da-9f7be863c458
படங்கள்: தற்காப்பு அமைச்சு -
multi-img1 of 3

சிங்கப்பூர் ஆயுதப்படை முதல் முறையாக 13 நாடுகளுடன் பல்வகை கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

சூப்பர் கருடா ஷீல்டு (Super Garuda Shield) எனும் இந்த பயிற்சி இந்தோனீசியாவில் ஆகஸ்ட் 1 முதல் 14 வரை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இந்தோனீசிய ராணுவத்திற்கும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் படைக்கும் இடையே நடைபெற்றுவரும் கருடா ஷீல்டு (Garuda Shield) பயிற்சியின் விரிவாக்கமாக சூப்பர் கருடா ஷீல்டு பயிற்சி அமைகிறது.

இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், மலேசியா, கனடா ஆகிய மற்ற நாடுகளும் கலந்துகொண்டன. மொத்தம் 4,000 வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டதாக ஜகார்த்தாவில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசிய, அமெரிக்கக் கடற்படைகளோடு சிங்கப்பூரின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ரியாவ் தீவுகளுக்கு அப்பால் பயிற்சிகளில் ஈடுபட்டன. நட்பு, புரிந்துணர்வு, நிபுணத்துவப் பரிமாற்றங்களுக்குப் பயிற்சி முக்கியத் தளமாக அமைந்ததாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.