'கவ்வாலட்' மூலம் இதுவரை 41 மில்லியன் வெள்ளி வழங்குதொகை

'கவ்வாலட்' மூலம் இதுவரை 41 மில்லியன் வெள்ளி வழங்குதொகை

1 mins read
01e64fb8-c8c4-4b0a-8082-38961fd85bf1
-

அர­சாங்க வழங்­கு­தொ­கை­க­ளுக்­கான மின்­னி­லக்­கச் சேவை 'கவ்­வா­லட்'. சென்ற ஆண்டு நவம்­பரில் தொடங்­கப்­பட்ட இந்­தச் செயலி காகி­தப் பயன்­பாட்­டைக் குறைக்க உத­வு­வ­து­டன் தொகை­களை எளி­தாக வழங்­க­வும் வகை­செய்­கிறது.

இது­வரை இதன் மூலம் 900,000 பரி­வர்த்­த­னை­கள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவற்­றின் மொத்த மதிப்பு 41 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­கம் என்­றும் ஓசி­பிசி வங்கி தெரி­வித்­தது.

'கவ்­வா­லட்' செயலி மூலம் சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் அவ­ர­வர் தகு­தி­பெ­றும் திட்­டத்­துக்­கேற்ப அர­சாங்­கம் வழங்­கும் தொகை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள இய­லும். இந்­தத் தொகையை வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு மாற்­றிக்­கொள்­ள­லாம் அல்­லது 'பே நவ் யூஇ­என்', 'நெட்ஸ் கியூ­ஆர்' ஆகி­ய­வற்­றின்­வழி கட்­ட­ணம் செலுத்­து­வதை ஏற்­றுக்­கொள்­ளும் வர்த்­த­கர்­க­ளி­டம் கட்­ட­ணம் செலுத்­தப் பயன்­ப­டுத்­த­லாம்.