ஊட்டச்சத்து விவரங்கள்: சிறிய நிறுவனங்களுக்கு விலக்கு

ஊட்டச்சத்து விவரங்கள்: சிறிய நிறுவனங்களுக்கு விலக்கு

1 mins read
73e915b0-9552-4a3e-9ef9-95dd99c87ef3
-

புதி­தா­கத் தயா­ரிக்­கப்­படும் பானங்­களில் ஊட்­டச்­சத்து விவ­ரங்­களை வெளி­யி­டு­வது கட்­டா­யம் என்று அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

முதற்­கட்­ட­மாக பெரிய நிறு­வனங்­க­ளுக்கு மட்­டும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் சிறிய நிறு­வ­னங்­க­ளுக்கு விலக்கு அளிப்­பது குறித்­தும் பரி­சீ­லிப்­ப­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. நடை­மு­றைச் சாத்­தி­யம் உள்ள வகை­யில் இவை அம­லாக்­கப்­படும் என்று சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு எழு­திய கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அனைத்து நிறு­வ­னங்­களும் தங்­கள் பானங்­களில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும் பொருள்­களில் உள்ள சர்க்­கரை, கொழுப்பு ஆகி­ய­வற்­றின் அளவை ஆய்­வுக்­கூ­டங்­களில் சோதித்து வெளி­யிட வேண்­டும் என்பதில்லை. பானங்­களில் சேர்க்­கப்­படும் பொருள்­க­ளின் அடிப்­படை­யில் அவற்றை உத்­தே­ச­மாக மதிப்­பிட்­டும் குறிப்­பி­ட­லாம் என்­றும் அந்­தக் கடி­தத்­தில் எழு­தப்­பட்­டுள்­ளது.

அடுத்து வரும் மாதங்­களில் கூடு­தல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, அடுத்த ஆண்டு இறு­திக்­குள் புதி­தா­கத் தயா­ரிக்­கப்­படும் பானங்­களில் உள்ள சர்க்­கரை, கொழுப்பு ஆகி­ய­வற்­றின் அளவை வெளி­யி­டு­வது கட்­டா­யம் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இம்­மா­தம் 11ஆம் தேதி தெரி­வித்­தார்.

காப்பி, பழச்­சா­று­கள், பபிள் டீ போன்­ற­வற்­றிற்­கும் இது பொருந்­தும் எனக் கூறப்­பட்­டது.