செய்திக்கொத்து

மின்னியல் முறையில் சிங்கப்பூரின் இயற்கை வரலாற்று ஆவணங்கள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகமும் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அரும்பொருளகமும் இணைந்து இம்மாதம் 10ஆம் தேதி, ‘புரோஜெக்ட் சிக்னிஃபை’ எனும் முயற்சியைத் தொடங்கியுள்ளன.

சிங்கப்பூரில் கடந்த 200 ஆண்டுகளாகக் காணப்படும் உயிரியல் பன்முகத்தன்மையின் வரலாற்றை மின்னிலக்க முறையில் ஆவணப்படுத்தும் திட்டம் இது.

ஐந்தாண்டுகளில் உலகெங்கும் உள்ள அரும்பொருளகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 10,000 வரலாற்றுச் சிறப்புமிக்க மாதிரிகள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி இணையத்தில் பதிவேற்றுவது இதன் இலக்கு.

மேலும் 250 மேம்பாலங்களில் மின்தூக்கிகளைப் பொருத்த பரிசீலனை

நிலப் போக்குவரத்து ஆணையம் மேலும் 250 மேம்பாலங்களில் மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கான சாத்தியம் குறித்துப் பரிசீலித்து வருகிறது. இதன் தொடர்பில் இரண்டு ஏலக்குத்தகைகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

ஏற்கெனவே சென்ற ஆண்டு 77 மேம்பாலங்களில் மின்தூக்கிகள் பொருத்தப்பட்டன. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 30 மேம்பாலங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளின் நிறைவில் மின்தூக்கிகளைப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக மின்தூக்கிகள் பொருத்தப்படவிருக்கும் 250 மேம்பாலங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மூத்தோர், நடமாட்டச் சவால்களை எதிர்நோக்குவோர் போன்ற, தேவை அதிகமுள்ளோர் வசிக்கும் இடங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று ஆணையம் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!