முதல் பலதரப்பு ராணுவப் பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள்

முதல் பலதரப்பு ராணுவப் பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள்

1 mins read
46567e0d-03b1-478e-84e7-744ab1c3e843
பலதரப்புப் பயிற்சியின்கீழ் களப் பயிற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் முதல்­மு­றை­யாக 13 நாடு­கள் பங்­கு­பெற்ற சிறப்பு ராணு­வப் பயிற்­சி­யில் கலந்து­கொண்­ட­தா­கத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

'எக்­சர்­சைஸ் சூப்­பர் கருடா ஷீல்டு' எனும் பயிற்சி இந்­தோ­னீ­சி­யா­வில் இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து 14ஆம் தேதி வரை நடை­பெற்­றது. இத்­த­கைய பயிற்சி இடம்­பெ­று­வது இது முதல்­முறை என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்­தோ­னீ­சிய தேசி­யத் தற்­காப்­புப் படை­களும் அமெ­ரிக்க-இந்தோ பசி­பிக் தள­பத்­தி­ய­மும் 'எக்­சர்­சைஸ் கருடா ஷீல்டு' எனும் இரு­த­ரப்பு வரு­டாந்­த­ரப் பயிற்­சியை நடத்­து­வது வழக்­கம்.

இம்­முறை விரி­வு­ப­டுத்­தப்­பட்ட பல­த­ரப்­புப் பயிற்­சி­யில் நியூ­சி­லாந்து, பிரான்ஸ், மலே­சியா, இந்­தியா, கனடா உள்­ளிட்ட நாடு­கள் கலந்து­கொண்­டன.

பங்­கேற்ற நாடு­க­ளின் ஆயு­தப்­படை­க­ளுக்கு இடையே ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த உத­விய இந்­தப் பயிற்­சி­யில், நாலா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான படை வீரர்­கள், தள­வா­டங்­க­ளு­டன் கலந்­து­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.