பேருந்து, ரயில் கட்டணங்களை கணக்கிடும் முறை மறுபரிசீலனை

பேருந்து, ரயில் கட்டணங்களை கணக்கிடும் முறை மறுபரிசீலனை

2 mins read
5ef4cf75-6465-4a35-b4b1-477925a377cd
பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை கணக்கிடும் முறையில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால் அது அடுத்த ஆண்டுதான் நடப்புக்கு வரும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேருந்து, ரயில் கட்­ட­ணங்­களை கணக்­கி­டும் முறையை பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் பரி­சீ­லிக்­க­வி­ருக்­கிறது.

அதற்­கான நடை­மு­றை­கள் ஏற்­கெ­னவே தொடங்­கப்­பட்டு அடுத்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் முடி­வ­டை­யும் என்று மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்டணங்­க­ளைக் கணக்­கி­டும் முறை­யில் ஏதா­வது மாற்­றம் செய்யப்­ பட்­டால் அது, 2023ஆம் ஆண்டின் கட்­டண மறு­ப­ரி­சீ­ல­னை­யின்­போது நடப்­புக்கு வரும்.

பொதுப்­ போக்­குவ­ரத்து பய­ணி­கள், பொதுப் போக்குவ­ரத்து நடத்து ­நர்­கள், தொழிற்­சங்க இயக்­கம், போக்குவரத்து நிபு­ணர்­கள் ஆகி­யோ­ரின் கருத்­து­கள் இதன் தொடர் பில் அறி­யப்­படும்.

ஆனால் இவ்­வாண்டு பிற்­ப­கு­தி ­யில் கட்­ட­ணம் பரிசீலிக்கப்படும்போது தற்­போ­துள்ள முறையே பின்­பற்­றப்­படும் என்று மன்­றம் குறிப்­பிட்­டது.

ஒவ்­வோர் ஆண்­டும் எந்த அள­வுக்கு பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணத்தைச் சரி செய்­ய­லாம் என்பதற்கு தற்­போ­தைய கணக்­கி­டும் முறை­யில் வரம்பு உள்­ளது.

இது, ஐந்து அம்­சங்­களை உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறது.

பண­வீக்­கம், எரி­பொ­ருள் விலை, சம்­பள உயர்வு, உற்­பத்­தித்­தி­றன் மற்­றும் பொதுப் போக்­கு­வ­ரத்து கட்­ட­மைப்பு ஆற்­றல் ஆகி­யவை அவை.

பொதுப்­போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணங்­க­ளைக் கணக்­கி­டும் முறை ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேனட் ஆங் தலை­மை­யி­லான பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

இந்த மன்­றத்­தில் கல்வி நிறு­வ­னங்­கள், வர்த்­த­கம், அடித்­தள அமைப்­பு­கள், தொழிற்­சங்­கங்­கள், நிபு­ணத்­துவ சேவை­கள் ஆகி­ய­வற்­றைப் பிர­தி­நி­திக்­கும் உறுப்­பி­னர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். இவர்­களை, போக்­கு­வ­ரத்து அமைச்சு நிய­மிக்­கிறது.

2018ல் பொதுப் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­க­ளைக் கணக்­கி­டும் முறை கடை­சி­யாக பரி­சீ­லிக்­கப் பட்­டது. அப்­போது, கட்­ட­மைப்பு ஆற்­றல் புதி­தாக சேர்த்­துக் கொள்­ளப்­பட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்து நடத்து நர்­க­ளின் நடத்­தும் செல­வு­கள் இடம் பெறும் வகை­யில் இந்த மாற்­றம் செய்­யப்­பட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்து துறை­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள், பய­ணங்­கள் இம்­முறை கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­படும் என்று மன்­றம் மேலும் கூறி­யது.

பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத் தின் முன்­னாள் தலை­வ­ரான ரிச்­சர்ட் மேக்­னஸ், மக்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது அதி­க­ரித்­துள்­ள­தால் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களை கடந்த ஆண்டு சுட்­டிக்காட்டியிருந்­தார்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக 2020 ஏப்­ரல் மற்­றும் மே மாதங்­களில் நாடு முழு­வ­தும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­போது சிங்­கப்­பூ­ரில் பொதுப் போக்­கு­வ­ரத்து பய­ணங்­கள் கொள்­ளை­நோய்க்கு முந்­தைய நிலை­யு­டன் ஒப்­பிட்­டால் 25 விழுக்­காடு குறைந்­தது.

கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்ட பிறகு பய­ணங்­கள் எண்­ணிக்கை கூடி­யது. இருந்­தா­லும் கொள்ளை நோய்க்கு முந்­தைய நிலையை அது இன்­ன­மும் எட்­ட­வில்லை.