சுவா சூ காங் பொது நூலகத்தில் மக்களை வரவேற்கும் புலி

சுவா சூ காங் பொது நூலகத்தில் மக்களை வரவேற்கும் புலி

2 mins read
7f1d6d17-5ea1-4346-afc1-081691e3fb4f
(இடமிருந்து வலம்) உலகளாவிய இயற்கைக்கான நிதியம்-சிங்கப்பூர் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். ரகுநாதன், தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் செர் போங் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியம்-சிங்கப்பூர் தலைவர் அச்சல் அகர்வால் ஆகியோர் 'டிரைபல் கோல்ட்' புலி சிற்பத்தை திறந்துவைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொன்மணி உதயகுமார்

தேசிய நூலக வாரியம் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின் (WWF) முயற்சியில் சுவா சூ காங் பொது நூலகத்தில் மக்களை புலி ஒன்று வரவேற்க வந்துள்ளது.

'டிரைபல் கோல்ட்' என அழைக்கப்படும் இப்புலிச் சிற்பத்தை தேசிய நூலக வாரியமும் உல களாவிய இயற்கைக்கான நிதியமும் இணைந்து திறந்துவைத்தன.

உலகளாவிய இயற்கைக்கான நிதியம், நூலகத்திற்கு நன்கொடை யாக அளித்துள்ள 'டிரைபல் கோல்ட்' சிற்பம் தென்கிழக்காசி யாவில் ஏறக்குறைய 1,000 புலிகள் மட்டும் எஞ்சி இருப்பதையும் வருங் கால சந்ததியினர் புலிகளை கண்ணால் காண்பது கேள்விக் குறியாக இருக்கும் நிலையையும் மக்களுக்கு புரிய வைக்கும் என நிதியத்தின் திரு ரகுநாதன் நம்பு கிறார். இயற்­கை­யு­டன் மனி­தர்­கள் தொடர்பை இழந்து­விட்ட இன்­றைய சூழ­லில் மீண்டும் தொடர்பை ஏற் ­ப­டுத்திக் கொள்­வதை கருப்­பொ­ரு­ளா­கக் கொண்ட இந்­நூ­ல­கத்­தின் மெய்­ நி­கர் கற்­றல் பாதை­யில் 'டிரை­பல் கோல்ட்' நிரந்­த­ர­மாக இடம் பெறும்.

மெய்­நி­கர் கற்­ற­லின் புதிய அங்­க­மாக, தாவ­ரங்­க­ளை­யும் வன­வி­லங்கு ­க­ளை­யும் முப்­ப­ரி­மா­ணத்­தில் காண்­பிக்­கக்­கூ­டிய மெய்­நி­கர் புத்­த­கங்­க­ளை­யும் நூலக வாரி­யம் வெளி­யிட்­டுள்­ளது.

சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு, வன­வி­லங்கு பாது­காப்பு போன்­ற­வற்­றின் அவ­சி­யத்­தை­யும், உயி­ரி­யல் அழிவு, சட்­ட­வி­ரோ­த­மாக வன­வி­லங்­கு­களை வேட்­டை­யா­டு­தல் போன்­றவை குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் பொது­மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­து­வது இம்­மா­தி­ரி­யான நிகழ்­வு­க­ளின் நோக்­கம் என்று தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ் மொழி பிரி­வின் தலை­வ­ரான அழ­கி­ய­பாண்­டி­யன், 58, பகிர்ந்­து­கொண்­டார்.

நூல­கத்­தில் இயற்­கை­வள பாது­காப்­பைக் கருப்­பொ­ரு­ளாக கொண்டு ஏற்­பாடு செய்­யப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு உள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். முக்­கி­ய­மாக, சிறு­வர்­க­ளுக் கிடையே இயற்கை பற்றி கற்­றுக் கொள்­வ­தில் ஆர்­வம் அதி­கம் இருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

நீடித்த நிலைத்­தன்­மையை அறி­வு­றுத்­தும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள சுவா சூ காங் பொது நூல­கம் சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் மறு­சீ­ர­மைப்­புப் பணி களுக்குப் பிறகு திறக்­கப்­பட்­டது.

அதை தொடர்ந்து, சென்ற மாதம் சிறந்த பசுமை நூல­க­மாக அனைத்­து­லக நூல­கச் சங்­கங்­கள், கல்வி நிலை­யங்­க­ளின் சம்­மே­ள­னம் அதனை தேர்ந்­தெ­டுத்­தது.

இயற்­கை­வள பாது­காப்­பின் அவ­சி­யத்­தை­யும் சுற்­றுச்­சூ­ழல் பிரச் சினை­க­ளின் தீய விளை­வு­கள் பற்­றி­யும் மக்­க­ளி­டையே விழிப் புணர்வை ஏற்­ப­டுத்த தேசிய நூலக வாரி­யம், குறிப்­பாக சுவா சூ காங் பொது நூல­கம் பல முயற்­சி­களில் தொடர்ந்து ஈடு­பட உள்­ளது.

இதன் விவ­ரங்­களை பொது மக்­கள் தேசிய நூலக வாரி­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் கண்­ட­றி­ய­லாம்.