இயந்திரவியல் புத்தாக்க ஆய்வு நிலையம் திறப்பு

ஊழி­யர் பற்­றாக்­குறை நில­வும் சிங்­கப்­பூ­ரில் தானி­யக்­க­மும் இயந்­திர மனி­தக் கரு­வி­களும் அவ­சி­ய­மா­கின்­றன. இதன் கார­ண­மா­கவே இயந்­திர மனி­தத் தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­து­ வ­தில் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­து­கிறது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று தெரி­வித்­தார்.

இயந்­தி­ர­வி­யல் துறை­யில் அதி­க­ரித்து வரும் வாய்ப்­பு­களை ஆய்­வா­ளர்­கள், நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­கள் ஆகிய முத்­த­ரப்­பி­ன­ரும் கைப்­பற்­ற­லாம் என்று அவர் யோசனை தெரி­வித்­தார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல் கலைக்கழ­கத்­தில் 45 மில்­லி­யன் செல­வில் இதற்­கான புதிய ஆய்வு நிலை­யம் நேற்று திறக்­கப்­பட்­டது.

நவீன இயந்­திர மனித தொழில்­நுட்­பப் புத்­தாக்க நிலை­யம் என்று அழைக்­கப்­படும் நிலை­யத்­தில் தள­வா­டம், உற்­பத்­தித் துறை, முதி­யோர் பரா­ம­ரிப்பு ஆகிய துறை­களில் தேவைப்­படும் இயந்­திர மனி­தர்­களை உரு­வாக்­கும் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும்.

அர­சாங்­கம், அதன் ஆய்வு, மேம்­பாட்­டுத் துறை­யில் இயந்­தி­ர­வி­யல் தொடர்­பான ஆய்­வுக்கு தேசிய முன்­னு­ரிமை அளித்து வரு­வதை அமைச்­சர் டான் எடுத்­து­ரைத்­தார். ஆராய்ச்­சி­யா­ளர்­கள் தொழில்­து­றை­யில் பயன்படுத்­தக்­கூ­டிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டக்­கூ­டிய திட்­டங்­களை உரு­வாக்­கு­வது முக்­கி­யம் என்று என்­றார் அவர்.

இது, நமது நிறு­வ­னங்­கள் உரு­மாற்­றப்­பட்ட பொருட்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் உரு­வாக்க பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!