தேர்வில் முறைகேடு; 6 பேர் விண்ணப்பங்களை மீட்டுக்கொண்டனர்

தேர்வில் முறைகேடு; 6 பேர் விண்ணப்பங்களை மீட்டுக்கொண்டனர்

2 mins read
7e505a42-c1fb-464c-980d-0789c4e60018
-

வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கான சட்­டத் தேர்­வில் ஏமாற்­றிய ஆறு பயிற்சி வழக்­க­றி­ஞர்­கள், வழக்­க­றி­ஞர் களாக தங்­களை அனு­ம­திக்­கக் கோரும் விண்­ணப்பங்களை மீட்டுக் கொண்­டுள்­ள­னர்.

திரு­வாட்டி மோனிஷா தேவ­ராஜ், திரு குஷல் அடுல் ஷா, திரு ஸ்ரீராம் ரவீந்­தி­ரன், திரு­வாட்டி லின் குவெக் யி டிங், திரு மாத்­திவ் சோவ் ஜுன் ஃபெங், திரு லய­னல் வோங் சூங் யூங் ஆகிய ஆறு பேர் இம்­மு­டிவை எடுத்­துள்­ள­னர். ஆறு மாதங்­கள் முதல் ஓராண்டு வரை அவர்­க­ளு­டைய விண்­ணப்­பங்­களை நிறுத்தி வைப்­ப­தா­கக் கூறிய நீதி­பதி சூ ஹான் டெக் முன்பு அவர்­கள் முன்­னி­லை­யா­கி­னர். அப்­போது பேசிய அவர்­க­ளு­டைய வழக்­க­றி­ஞர்­கள், தங்­களை வழக்­க­றி­ஞர்­க­ளாக அனு­ம­திக்க தகு­தி­யா­ன­வர்­கள் என்­ப­தைக் காட்ட ஒத்திவைக்­கப்­பட்ட காலம் போது­மா­ன­தாக இல்லை என்­பதை அவர்­கள் உணர்ந்­துள்­ள­னர் என்­றார்.

அவர்­களில் மூவ­ரைப் பிரதி நிதிக்­கும் மூத்த வழக்­க­றி­ஞ­ரான என். ஸ்ரீனி­வா­சன், திரு லியோன் டே குவான் லி சம்­ப­வத்­தில் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் எடுத்­துள்ள முடி­வி­லி­ருந்து வழி­காட்­டு­தலை தமது கட்­சிக்­கா­ரர்­கள் பின்­பற்­று­வ­தா­கத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் அல்­லது வேறு எந்த இடத்­தி­லும் குறைந்­தது ஐந்து ஆண்­டு­க­ளுக்கு புதிய விண்­ணப்­பங்­களை சமர்­ப்பிக்­கக்­கூ­டாது என்ற நிபந்­த­னை­யின்­கீழ் திரு டே தமது விண்­ணப்­பங்­களை மீட்­டுக்­கொள்ள கடந்த மே மாதத்­தில் தலைமை நீதி­பதி மேனன் அனு­ம­தித்­தி­ருந்­தார். இதை தமது கட்­சிக்­கா­ரர்­கள் பின்­பற்றி புதிய விண்­ணப்­பங்­களை சமர்ப்­பிக்க மாட்­டார்­கள் என்­றார் திரு ஸ்ரீனி­வா­சன். திரு சோவை பிர­தி­நி­திக்­கும் வழக்­க­றி­ஞர் லோ சாய் சோங்­கும் இதையே எதி­ரொ­லித்­தார்.

2020ஆம் ஆண்­டின் இறு­தி­யில் நடை­பெற்ற வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கான பகுதி 'பி' தேர்­வில் ஏமாற்­றிய 11 வழக்­க­றி­ஞர்­களில் இவர்­கள் ஆறு பேரும் அடங்­கு­வர். திரு­வாட்டி மோனிஷா, திரு ஷா, திரு ஸ்ரீராம், திரு சோவ், திரு வோங் ஆகி­யோர் தங்­க­ளு­டைய விடைத்­தாள்­களை வாட்ஸ்­அப் மூலம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

திரு குவேக் தன் மீதான குற்­றச் சாட்டை மறுத்­தார். ஆனால் அவ­ரது விளக்­கம் ஏற்­றுக்­கொள்­ளும்­படி இல்லை. மூன்று தாள்­களில் அவர் மற்­ற­வ­ரு­டன் கூட்டு சேர்ந்து ஏமாற்­றி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஐந்து வழக்­க­றி­ஞர்­களும் இனி ஆறு தாள்­களில் தேர்ச்சி பெற்­றாக வேண்­டும்.

திரு குவேக் முழுத் தேர்­வை­யும் மீண்­டும் செய்ய வேண்­டும்.