ஆசிரியர்களுக்கு 10% வரை சம்பள உயர்வு

ஆசிரியர்களுக்கு 10% வரை சம்பள உயர்வு

1 mins read
5594e881-3cbe-4bd0-9203-daae461458f6
ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

ஆசிரியர்கள், சார்புநிலைக் கல்வியாளர்கள், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஐந்து விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை சம்பள் உயர்வு வழங்கப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சம்பளம் உயர்த்தப்படும்.

இதன் வழி 35,000 ஆசிரியர்கள், 1,600 சார்புநிலைக் கல்வியாளர்கள், கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் பணியாற்றும் 800 ஆசிரியர்கள் ஆகியோர் பயனடைவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

ஆசிரியர்கள், சார்புநிலைக் கல்வியாளர்கள் ஆகியோரின் சம்பளம் கடைசியாக 2015ல் மறுஆய்வு செய்யப்பட்டது.

இத்துடன், பொதுக் கல்வி அதிகாரி 5ஏ எனும் புதிய பிரிவு அடுத்தாண்டு உருவாக்கப்படும். சிறப்பாக பணியாற்றும் முக்கிய பதவிகளில் இல்லாத ஆசிரியர்கள் இந்த பிரிவுக்கு உயர்த்தப்படுவர். அவர்களுக்கு அதிக சம்பளமும் வழங்கப்படும்.

இதோடு, ஆசிரியர்களை பணியில் 30 ஆண்டுகள் வரை தக்கவைத்துகொள்ளும் திட்டம் மேம்படுத்தப்படும். இதன் கீழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகை 20 விழுக்காடு அதிகரிக்கப்படும்.