ஆர்ச்சர்ட் டவர்ஸ் கைகலப்பு: மூவர் மீது குற்றச்சாட்டு

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கைகலப்பு: மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
f73eaebc-9713-4ae9-aee1-a06f1b83bfe6
படம்: பேஸ்புக் -

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்துக்கு வெளியே சண்டைபோட்ட மூவர் மீது கலவரம் செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது.

அப்துல் ஹக்கீம் ஜமீல், 30, முகமது யுஸ்ரி ராம்லீ, 26, மற்றும் முகமது ஃபிக்ரி ஜுனைடி ஆகிய மூவர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் மற்ற இரு ஆடவர்களை தாக்கினர் என்ற குற்றச்சாட்டு அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது. மூவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளர்.

காவல் துறை கேமிராக்கள், கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தின் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் கிட்டத்தட்ட 20 பேர் இருவரை அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காணொளி வாட்ஸ்அப் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

ஆர்ச்சர்ட் டவர்சில் உள்ள கேளிக்கை விடுதிகளின் உரிமங்கள் அடுத்தாண்டு மே மாதத்துக்கு பிறகு புதுப்பிக்கப்படாது என்று சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ச்சர்ட் டவர்சில் சட்ட, ஒழுங்கு நிலைமை பல ஆண்டுகளாக மேம்படவில்லை என்று காவல் துறை குறிப்பிட்டது.