சாலை விபத்து: குழந்தை மருத்துவமனையில்

சாலை விபத்து: குழந்தை மருத்துவமனையில்

1 mins read
b706a448-b638-4175-b540-e9e331ebb38b
படம்: சின் மின் நாளிதழ் -

கேலாங், தஞ்சோங் காதோங் சாலை சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒரு 11 மாத குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

நேற்று (ஆகஸ்ட் 15) மாலை சுமார் 6.45 மணியளவில் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை ஆம்புலன்சும் இரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டன. ஒரு காரில் இருந்த குழந்தைக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. வேறொரு ஆம்புலன்ஸ் வழி அந்த குழந்தை கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை கூறியது.

வேறொரு சம்பவ இடத்துக்கு விரைந்துகொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டபோது வண்டியின் எச்சரிக்கை விளக்கு மின்னிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

காவல் துறையின் விசாரணை தொடர்கிறது.