தலைமைத்துவ மாற்றத்துக்கு இரண்டு சாத்தியக்கூறுகள்

தலைமைத்துவ மாற்றத்துக்கு இரண்டு சாத்தியக்கூறுகள்

2 mins read
c543601f-77d9-47f2-a5fd-282aaa88a0b5
புளூம்­பெர்க்­ செய்தி நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசி­ரி­யர் திரு ஜான் மிக்கல்த்வெய்ட் துணைப் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கை பேட்டி கண்டார். படம்: நிதி அமைச்சு -

சிங்­கப்­பூ­ரின் பிர­த­ம­ராக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் எப்­போது பதவி ஏற்­பார் என்­பது குறித்து இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் அவரை அந்­தப் பத­விக்­குத் தயார்ப்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தி­டம் நேற்று முன்­தி­னம் பேசிய திரு வோங், தலை­மைத்­து­வம் மாற்­றம் தொடர்­பாக இரண்டு சாத்­தி­யக்­கூ­று­களைப் பட்­டி­ய­லிட்­டார்.

முத­லா­வது, அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முன்­னரே திரு வோங் பிர­த­மர் பொறுப்பை ஏற்­கக்­கூ­டும். 2025 நவம்­பர் மாதத்­திற்­குள் பொதுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். அவ்­வாறு தாம் பிர­த­மர் பொறுப்பை ஏற்­றால், மக்­கள் செயல் கட்­சிை­ய­யும் 4ஜி தலை­வர்­கள் எனப்­படும் நான்­காம் தலை­முறை அர­சி­யல் தலை­வர்­க­ளை­யும் 2025 தேர்­த­லுக்கு தம்­மால் 'தெளி­வாக வழி­ந­டத்த' முடி­யும் என்­றார் திரு வோங்.

இரண்­டா­வது சாத்­தி­யக்­கூறு, பிர­த­மர் லீ சியன் லூங் தொடர்ந்து அந்­தப் பத­வி­யில் நீடித்து அடுத்த பொதுத் தேர்­தலை வழி­ந­டத்­தக்­கூ­டும் என்­றும் தேர்­த­லில் மசெக வென்­றால் அதன் பின்­னர் அவர் பிரதமர் பொறுப்பை தம்­மி­டம் ஒப்­

ப­டைக்­கக்­கூ­டும் என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

"இந்த இரண்டு தெரி­வு­கள் உள்­ள­போ­தி­லும் தலை­மைத்­துவ மாற்­றம் எப்­போது நிக­ழும் என்­பது பற்றி இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் தலை­வர்­கள் குழுவை அமைப்­பது பற்­றி­யும் விரி­வாக்­கப்­பட்­டுள்ள தமது பொறுப்பை நன்கு பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்­வது பற்­றி­யும் சிந்­திப்­பதே இப்­போ­தைக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

நிதி அமைச்­ச­ரா­க­வும் உள்ள அவர் கடந்த ஜூன் மாதம் துணைப் பிர­த­ம­ரா­கப் பதவி உயர்த்­தப்­பட்­டார். பிர­த­மர் லீ நாட்­டில் இல்­லா­த­போது தற்­கா­லி­கப் பிர­த­மர் பொறுப்பு அவ­ரி­டம் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

அத்­து­டன், பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின்­கீழ் செயல்­படும் உத்தி வகுக்­கும் குழு­வுக்­கும் அவர் பொறுப்பு வகிக்­கி­றார். மற்­றொரு துணைப் பிர­த­ம­ரான ஹெங் சுவீ கியட்­டி­டம் இருந்து இந்­தப் பொறுப்பு திரு வோங்­கிற்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

லாரன்ஸ் வோங் எப்போது பிரதமர் ஆவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை