சிங்கப்பூர், இந்தோனீசிய கடற்படைகள் பயிற்சி

சிங்கப்பூர், இந்தோனீசிய கடற்படைகள் பயிற்சி

2 mins read
f6a420ba-8fee-47ce-8c22-442f821e42e5
'எம்வி ஸ்விஃப்ட்' மீட்புக் கப்பலில் கூட்டுப் பயிற்சியைத் தொடங்குமுன் அதுகுறித்து சிங்கப்பூர் குடியரசு கடற்படை வீரர்கள் விளக்கினர். படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு -

கட­லடி அச்­சு­றுத்­தல்­களை இணைந்து முறி­ய­டிக்­கும் திறனை மேம்­ப­டுத்­தும் நோக்­கு­டன் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் ஆறு நாள் இரு­த­ரப்பு ராணு­வப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டன.

இரு நாடு­க­ளின் கடற்­ப­டை­

க­ளை­யும் சேர்ந்த 230க்கும் மேற்­பட்ட தேசிய சேவை­யா­ளர்­கள் இந்­தப் பயிற்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

'ஜாய்ண்ட் மினெக்ஸ் பாண்டு' என்­னும் பெய­ரி­லான கூட்­டுப் பயிற்சி கடந்த வியா­ழக்­கி­ழமை (ஆகஸ்ட் 11) சாங்கி கடற்­ப­டைத் தளத்­தில் தொடங்­கி­யது.

சிங்­கப்­பூ­ரின் கடல் நீரி­லும் இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம், பிந்­தான் கடல் நீரி­லும் நடத்­தப்­பட்டு வந்த பயிற்சி நேற்­று­டன் நிறை­வு­பெற்­றது.

கட­லடி கண்­ணி­வெ­டி­யைக் கூட்­டா­கக் கண்­டு­பி­டித்து முறி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­கள், முக்­கு­ளித்­தல் மற்­றும் கப்­ப­லி­லி­ருந்து அச்­சு­றுத்­தல்­க­ளைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­கள், உண்­மை­யான துப்­பாக்­கிச்­சூடு நடத்தி பயிற்சி செய்­தல், கண்­ணி­வெடி வேட்டை மற்­றும் முக்­கு­ளித்­தல் திறன்­கள் தொடர்­பான நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றம் போன்­ற­வற்­றில் இரு­நாட்­டுப் படை­யி­ன­ரும் ஈடு­பட்­ட­னர்.

ஆர்­எஸ்­எஸ் பொங்­கோல், ஆர்­எஸ்­எஸ் பிடோக் என்­னும் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­ப­டை­யின் கண்­ணி­வெடி முறி­ய­டிப்­புக் கப்­பல்­கள் இரண்­டும் பயிற்­சி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

கடற்­ப­டை­யின் முக்­கு­ளிப்­புப் பிரி­வின் படை­யி­ன­ரும் இதில் பங்­கேற்­ற­னர். அதே­போல இந்­தோ­னீ­சிய கடற்­ப­டை­யும் இரண்டு கப்­பல்­க­ளை­யும் முக்­கு­ளிப்­புப் படை­யி­ன­ரை­யும் பயிற்­சி­யில் ஈடு­ப­டுத்­தி­யது.

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சிய கடற்­

ப­டை­கள் பல­த­ரப்­பட்ட மலாக்­கா நீரிணை சுற்­றுக்­கா­வ­லில் ஒன்­றோ­டொன்று ஒத்­து­ழைத்­த­தா­க­வும் அச்­சு­றுத்­தல் முறி­ய­டிப்பு தொடர்­பான நிபு­ணத்­துவ பரி­மாற்­றங்­க­ளைச் செய்­து­கொண்­ட­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்சு நேற்று ஓர் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

மேலும், இந்தக் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சி­யா­வுக்கு இடை­யி­லான நீண்­ட­கால, அணுக்க தற்­காப்பு உற­வு­களை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வும் அமைச்­சின் அறிக்கை தெரி வித்தது.