சாலை விபத்து: மருத்துவமனையில் 11 மாதக் குழந்தை

1 mins read
bf8f7f06-26da-4fc4-ae09-c5c5676feee8
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­குச் சொந்­த­மான மருத்­துவ வாக­ன­மும் இரண்டு கார்­களும் நேற்று முன்­தினம் மாலை விபத்­துக்­குள்­ளா­கின.

இந்த விபத்து கேலாங் சாலைக்­கும் தஞ்­சோங் காத்­தோங் சாலைக்­கும் இடைப்­பட்ட சாலைச் சந்­திப்­பில் மாலை 6.45 மணி அள­வில் நிகழ்ந்­தது. விபத்து கார­ண­மாக அப்­ப­கு­தி­யில் கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரத்­துக்கு போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

விபத்­தில் சிக்­கிய காரில் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த 11 மாதக் குழந்­தைக்கு இலே­சான காயங்­கள் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அக்­கு­ழந்தை சுய­

நி­னை­வு­டன் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

குழந்­தை­யின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக மருத்­து­வ­மனை கூறி­யது.

விபத்து நிகழ்­வ­தற்கு முன்பு நோயாளி ஒரு­வரை மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு செல்ல சம்­பந்­தப்­பட்ட மருத்­துவ வாக­னம் சென்­று­கொண்­டி­ருந்­த­தா­க­வும்

எச்­ச­ரிக்கை விளக்­கு­கள் இயக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.