2030க்குள் 40% சிறப்புத் தேவையுடையோரை வேலையில் சேர்ப்பது இலக்கு

2030க்குள் 40% சிறப்புத் தேவையுடையோரை வேலையில் சேர்ப்பது இலக்கு

1 mins read
58e35e2c-41f9-49b0-8b5e-d3e83b67ce4a
சிறப்புத் தேவையுடைய ஒருவர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை பார்க்கும் வயதில் இருக்கும் சிறப்புத் தேவையுடையோரில் 40 விழுக்காட்டினரை 2030ஆம் ஆண்டுக்குள் வேலையில் அமர்த்தும் இலக்கை சிங்கப்பூர் கொண்டுள்ளது.

2020, 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த விகிதம் சுமார் 30 விழுக்காடாக இருந்தது.

'இஎம்பி2030' எனப்படும் 'துணைபுரியம் பெருந்திட்டம் 2030'ன்கீழ் இந்த இலக்கு வரையப்பட்டுள்ளது.

சிறப்புத் தேவையுடையோருக்கு ஆதரவு வழங்கி சமூகத்திற்குப் பங்களிக்க வகைசெய்வது நோக்கம்.

இலக்கை அடைய அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறுவனங்கள் மேற்கொள்ளக்கூடிய பரிந்துரைகளையும் பெருந்திட்டம் முன்வைத்துள்ளது.

சிறப்புத் தேவையுடையோருக்கான மாறுபட்ட வேலை நியமன முறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க செயற்குழு ஒன்றை அமைப்பது பரிந்துரைகளில் அடங்கும்.