பல பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்வு

பல பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்வு

1 mins read
f780f039-6ef3-4335-90d0-92e30feb7aff
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெரும்பாலான வாகனப் பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரித்துள்ளது.

1,600 சிசி அல்லது அதற்குக் குறைவான கொள்ளளவைக் கொண்ட வாகனங்களுக்கான பிரிவில் கட்டணம் 7,889 வெள்ளி கூடி 87,889 வெள்ளியாகப் பதிவானது.

110 கிலோவாட் வரை சக்திகொண்ட மின்சார வாகனங்களும் இப்பிரிவில் அடங்கும்.

பெரிய வாகனங்களுக்கான பிரிவில் கட்டணம் 4.7 விழுக்காடு அதிகரித்து 112,001 வெள்ளியாகப் பதிவானது.

கூடுதல் கொள்ளளவைக் கொண்ட பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவை இப்பிரிவில் அடங்கும்.

மோட்டார்சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 0.9 விழுக்காடு அதிகரித்து 11,101 வெள்ளியாகப் பதிவானது.

மோட்டார்சைக்கிள்களைத் தவிர எவ்வித வாகனமும் இடம்பெறக்கூடிய பொதுப் பிரிவில் கட்டணம் 0.9 விழுக்காடு குறைந்து 112,001 வெள்ளியாகப் பதிவானது.