'எஸ்எம்யு' தலைவராகும் பியூஷ் குப்தா

'எஸ்எம்யு' தலைவராகும் பியூஷ் குப்தா

1 mins read
4a2b1b38-972e-4a30-9598-931f12eb40ea
டிபிஎஸ் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான டிபிஎஸ்ஸின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தாவுக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து அவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) தலைவராகவும் பதவி வகிப்பார்.

தற்போது அப்பொறுப்பில் உள்ள ஹே குவோன் பிங் அதே நாளில் பதவி விலகுகிறார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தை சிங்கப்பூரின் மூன்றாவது பல்லைக்கழகமாக உருவாக்கும் முயற்சியில் தலைவர் பொறுப்பை ஏற்க திரு ஹோவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் அதைப் பல்கலைக்கழகப் பாதைக்கு இட்டுச் சென்றார்.