தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையில் அமைந்திருக்கும் 11 புதிய ரயில் நிலையங்கள் இவ்வாண்டிறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் மூன்றாம் கட்டமாகத் திறக்கப்படவிருக்கும் அந்த நிலையங்களுக்கான கட்டுமான, சோதனைப் பணிகள் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன.
அதைத் தொடர்ந்து ஸ்டீவன்ஸ் நிலையத்திலிருந்து ஆர்ச்சர்ட், ஊட்ரம் பார்க் ஆகிய நிலையங்களின் வழி கரையோரப் பூந்தோட்டத்திம் வரை அமைந்துள்ள புதிய நிலையங்கள் ஆண்டிறுதிக்குள் திறக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதை முன்னிட்டு புதிய நிலையங்களுக்கான மேலும் சில சோதனைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நடத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் புதன்கிழமையன்று (17 ஆகஸ்ட்) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

