11 எம்ஆர்டி நிலையங்கள் ஆண்டிறுதிக்குள் திறப்பு

11 எம்ஆர்டி நிலையங்கள் ஆண்டிறுதிக்குள் திறப்பு

2 mins read
bf153a43-1ce6-46d4-b413-aec87d991f78
11 புதிய நிலையங்களையும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாக நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்­கான மூன்­றாம் கட்­டப் பணி­கள் நிறை­வு­பெற்­று­விட்­ட­தைத் தொடர்ந்து அதன் 11 புதிய நிலை­யங்­களை ஆண்­டி­று­திக்­குள் திறக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

எல்­லா­வி­த­மான கட்­டு­மான, கட்­ட­மைப்­புப் பணி­களும் சோதனை நட­வ­டிக்­கை­களும் முடி­வுற்­ற­தைத் தொடர்ந்து இந்த 11 நிலை­யங்­

க­ளை­யும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தி­டம் வழங்­கி­விட்­ட­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று கூறி­யது.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்­கான ரயில் போக்­கு­வ­ரத்தை ஏற்று நடத்­தும் எஸ்­எம்­ஆர்டி, புதிய நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு முன்­னர் அடுத்த சில மாதங்­களில் அவற்­றில் நடை­மு­றைச் சோத­னை­களை நடத்­தும்.

ஸ்டீ­வன்ஸ் நிலை­யம் தொடங்கி, ஆர்ச்­சர்ட், ஊட்­ரம் பார்க், கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் செல்­

வ­தற்­கான எம்­ஆர்டி பாதை­யில் அமைந்­தி­ருக்­கும் 11 புதிய நிலை­யங்­களும் இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யி­லி­ருந்து செயல்­ப­டத் தொடங்­கும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் கடந்த மார்ச் மாதம் அறி­வித்து இருந்­தார்.

அது­கு­றித்து நேற்று அவர் தமது ஃபேஸ்புக்­கில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் மூன்­றாம் கட்­டப் பணி­களில் இடம்­பெற்ற சமிக்ஞை முறை சோத­னை­கள் வார­யி­று­தி­யில் நடத்தி முடிக்­கப்­பட்­ட­தாக அவர் அந்­தப் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

இத­னைத் தொடர்ந்து, ஆண்­டி­று­திக்­குள் ரயில் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்­கு­வ­தற்கு ஏது­வாக எல்லா அம்­சங்­களும் தயா­ராக உள்­ள­னவா என்­பதை எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் சோதிக்­கும் என்­றும் திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் 1ஆம் கட்­டம் முதல் 3ஆம் கட்­டம் வரை­யி­லான போக்கு­ வ­ரத்­துக்குரிய ஒருங்­கி­ணைந்த கட்­ட­மைப்­புகளிலும் அதில் இடம்­பெற்­றுள்ள ரயில்­க­ளிலும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­ன­மும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் இவ்­வாண்­டின் தொடக்­கம் முதல் பல­கட்ட சோத­னை­களை நடத்­தின.

சிங்­கப்­பூ­ரின் ஆறா­வது ரயில் பாதை­யான தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் ஓடும் ரயில்­களில் அண்­மைய மாதங்­க­ளில் கோளா­று­கள் ஏற்­பட்­டன.

ஏப்ரல் 27ஆம் தேதி காலை நேரம் உட்லண்ட்ஸ் நிலையத்துக்கும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்துக்கும் இைடப்பட்ட பாதையில் ரயில் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக 50 பயணிகள் ஒன்றரை மணி நேரம் அவதியுற நேர்ந்தது.

தொடர்ந்து, மே 19ஆம் தேதி சமிக்ஞை கோளாறு காரணமாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரு மார்க்கத்திலும் ரயில்கள் ஆக மெதுவாகச் சென்றன. அதன் காரணமாக பயணிகள் கூடுதலாக 10 நிமிடம் காத்திருக்க வேண்டி இருந்தது.

மூன்றாவதாக, ஜூலை 6ஆம் தேதியும் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டது. அதனால் இந்த ரயில் பாதை முழுவதும் மூன்றரை மணி நேரத்திற்கு போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டது. ஆறு நிலை யங்களில் குறைந்த பட்சம் 40 நிமிடங்கள் ரயில்களுக்குள் பயணிகள் சிக்கி அவதிப்பட்டனர்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கான மூன்றாம் கட்ட பணிகள் நிறைவு