மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி குறைந்ததன் விளைவாக சிங்கப்பூரின் முக்கிய துறைகளின் ஏற்றுமதி கடந்த மாதம் மெதுவான வளர்ச்சியைச் சந்தித்தது.
உலகப் பொருளியல் நிலவரம் இருள்சூழ்ந்து இருப்பதால் இதே நிலைமை இனிவரும் காலத்திலும் தொடரும் என பொருளியல் பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆண்டுக்காண்டு அடிப்படையில், எண்ணெய் சாராத ஏற்றுமதி ஜூலை மாதம் 7 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக 'எண்டர்
பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு நேற்று தெரிவித்தது. இது மெதுவான வளர்ச்சியாக இருந்தபோதிலும் புளூம்பெர்க் ஆய்வில் பங்கேற்ற பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்த அளவைக் காட்டிலும் அதிகம்.
ஜூலை மாத ஏற்றுமதி 6.4 விழுக்காடு ஏற்றம் காணலாம் என அவர்கள் முன்னுரைத்து இருந்தனர். முன்னுரைப்பை முறியடித்த ஜூலை மாத ஏற்றுமதி வளர்ச்சி, ஆண்டுக்காண்டு அடிப்படையில் தொடர்ந்து 20வது மாதமாகப் பதிவான வளர்ச்சி என்பதும் குறிப்
பிடத்தக்கது.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்
படையில் ஜூலை மாதம் 10.3 விழுக்காடு ஏற்றம் கண்டது. இது ஜூன் மாதத்தைக் காட்டிலும் 4.1 விழுக்காடு அதிகம்.
மின்னணுப் பொருள்களில் வட்டு இயக்கிகளே அதிகம் ஏற்றுமதி ஆயின. முந்திய அளவைவிட கிட்டத்தட்ட 110.2 விழுக்காடு அதன் ஏற்றுமதி வளர்ச்சி கண்டது.
இதற்கு அடுத்த நிலையில் 'ஐசி' எனப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளுக்கான பாகங்கள் 83.2 விழுக்காடும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் 18.5 விழுக்காடும் அதிகமாக ஏற்றுமதி ஆயின.
அதேநேரம் மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.1 விழுக்காடு என குறைவாகப் பதிவானது. ஜூன் மாதத்தைக் காட்டிலும் இது 10 விழுக்காடு குறைவு.
ஜூலை மாதம் உலகின் முதல் பத்து நிலையில் இருக்கும் சந்தை
களுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதி அதிகரித்தது.
ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா, தைவான் ஆகியன ஏற்றுமதியில் ஆகப்பெரிய பங்களிப்பு வகித்தன. அதேநேரம் சீனா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது.

