சிறப்புத் தேவை மாணவர்களின் படைப்புகளுடன் கண்காட்சி

சிறப்புத் தேவை மாணவர்களின் படைப்புகளுடன் கண்காட்சி

2 mins read
7b306465-3dca-4da0-9baf-04371e8214da
கண்காட்சியில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையிட்ட அதிபர் ஹலிமா யாக்கோப், அவை தொடர்பாக மாணவர்களுடன் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் கலைக் கண்­காட்சி ஒன்று நேற்று தொடங்­கி­யது. 'எக்­பி­ர­சன்ஸ் த்ரூ ஆர்ட்' என்­னும் அந்­தக் கண்­காட்சி இம்­மா­தம் 28ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

சிறப்­புத் தேவை­யு­டைய பிள்­ளை­க­ளுக்­கான 21 பள்­ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் வரைந்த ஓவி­யங்­களும் அவர்­கள் படைத்த சிற்­பங்­களும் இங்கு காட்­சிக்கு வைக்­கப்­பட்டு உள்­ளன.

சிங்­டெல் ஏற்று நடத்­தும் இப்

­ப­டி­யொரு கண்­காட்சி சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­று­வது இதுவே முதல்­முறை.

இங்கு வைக்­கப்­பட்­டுள்ள படைப்­பு­களில் கெனோ­சி­யன் பள்­ளி­யைச் சேர்ந்த ரெக்ஸ் சான் என்­னும் 12 வயது மாண­வர் வரைந்த 'அக்­ரி­லிக்' ஓவி­யம் ஒன்­றும் வைக்­கப்­பட்டுள்­ளது. சாம்­ப­லி­லி­ருந்த உயிர்த்­தெ­ழும் ஃபீனிக்ஸ் பறவை ஓவி­யத்தை அவர் வரைந்­தி­ருந்­தார்.

'ஹேரி பாட்­டர்' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற 'ஃபாக்ஸ்' என்­னும் ஃபீனிக்ஸ் பறவை இதனை வரை­யத் தூண்­டி­ய­தாக அந்த மாண­வர் தெரி­வித்­தார்.

செவித்­தி­றனை இழந்த ரெக்ஸ், "நான் எப்­போ­தும் வலிமை பெற்­ற­வ­னா­க­வும் எல்­லா­வி­த­மான தடங்­கல்­க­ளை­யும் எதிர்­கொள்­ப­வ­னா­க­வும் இருக்க வேண்­டும்; பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளித்­துத் தீர்வு காண­வேண்­டும் என்­னும் எண்­ணத்தை அந்­தப் பறவை எனக்­குள் விதைத்­தது. மேலும், வரை­வது என்­பது என் மனதை எளி­மை­யாக வைத்­துக்­கொள்ள உத­வு­கிறது. இதன்­மூ­லம் எனது மனச்­சு­மை­களை இறக்கி வைக்க முடி­கிறது," என்­றார்.

இந்­தப் பள்­ளி­யின் கலைப் பிரிவு ஆசி­ரி­யர் செரினா லீ, 49, தமது மாண­வர்­கள் கலை­கள் மூலம் எண்ண ஓட்­டங்­களை வெளிப்­ப­டுத்­தக் கூடி­ய­வர்­கள் என்­றார்.

அதி­பர் ஹலிமா யாக்கோப், நேற்று இந்­தக் கண்­காட்­சி­யைத் திறந்து வைத்­தார். இரண்­டாம் கல்வி அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மா­னும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார்.

இய­லா­த­வர்­க­ளுக்கு உதவ அதி­க­மான நிறு­வ­னங்­கள் முன்­

வ­ரும் என்று தாம் நம்­பு­வ­தாக அதி­பர் ஹலிமா குறிப்­பிட்­டார்.

"நாம் ஒரு தேச­மாக வளர்ச்­சி­பெ­று­கை­யில், எந்­த­வொரு சமூ­க­மும் பின்­தங்­கி­வி­டா­த­வாறு பன்­

மு­கத்­தன்­மை­யு­டன் செயல்­ப­டு­

வ­தைத் தொட­ரு­வது அவ­சி­யம்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.