சிஓஇ எனப்படும் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான நேற்றைய ஏலத்தில் ஒரே ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் கட்டணங்கள் ஏற்றம் கண்டன.
1,600சிசி வரையிலான பிரிமியம் வகை கார்கள் அல்லது 110 கிலோவாட் திறன் கொண்ட மின்சார வாகனங்களுக்கான சிஓஇ 9.9 விழுக்காடு அதிகரித்து $87,889 ஆனது. முந்திய ஏலத்தில் இது $80,000ஆக இருந்தது.
பெரிய, அதிகத் திறன் கொண்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $112,001லிருந்து 4.7 விழுக்காடு உயர்ந்து $107,001 ஆனது. வணிக வாகனங்களுக்கான கட்டணங்களும் 5.4 விழுக்காடு ஏற்றம் கண்டு $59,090ஐத் தொட்டது. இதன் முந்திய கட்டணம் $56,089. மோட்டார்சைக்கிள் பிரிவிலும் 0.9 விழுக்காடு உயர்வு பதிவானது. அதன் காரணமாக $59,089 என்னும் பழைய கட்டணத்திலிருந்து $59,090க்கு அது அதிகரித்தது.
அதேநேரம் பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள வாகனங்களுக்கான சிஓஇ 0.9 விழுக்காடு சரிவைச் சந்தித்து $112,001 என்று முடிவடைந்தது. இரு வாரங்
களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் இதன் கட்டணம் $113,000ஆக பதிவாகி இருந்தது.

