திருடப்பட்டதாக நம்பப்படும் நேப்பாள கலைப்பொருள் ஒன்றை தேசிய மரபுடைமை வாரியத்தின் நடைமுறை
களுக்கு இணங்க ஆசிய நாகரிக அரும்பொருளகம் கைப்பற்றியதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். இருப்பினும் அது எவ்வாறு கைப்பற்றப்பட்டது என்ற கேள்விக்கு அரும்பொருளகம் பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளுடன் பேசிய பேச்சாளர், இந்துக் கடவுளான சிவனின் தோற்றம் கொண்ட சமய கலைப்பொருள் திருடப்பட்டது என்பதை அரும்பொருளகம் அறிந்திருந்ததாகக் கூறினார்.
செப்பு உலோகக் கவசத்துட னான கலைப்பொருளை
2015ஆம் ஆண்டு, தேசிய மரபுடைமை வாரியத்தின் கைப்பற்றுதல் தொடர்பான நடைமுறைகளுக்கு இணங்க ஆசிய நாகரிக அரும்பொருளகம் கைப்பற்றியதாக பேச்
சாளர் குறிப்பிட்டார்.
கல்லால் செதுக்கப்பட்ட லிங்க உருவத்தின் மீது 386 ஆண்டு பழமை வாய்ந்த செப்புக் கவசம் பொருத்தப்பட்டதாக அரும்பொருளகம் அந்தக் கலைப்பொருளின்கீழ் எழுதி வைத்துள்ளது.

