சிங்கப்பூரில் அதிக செல்வந்தர்கள் இருப்பர்

சிங்கப்பூரில் அதிக செல்வந்தர்கள் இருப்பர்

2 mins read
0ceea59f-97e9-4c4f-a7fb-d0c0557b80af
-

எச்எஸ்பிசி ஆய்வு: 2030ல் அமெரிக்கா, சீனாவை விஞ்சிவிடும்

மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில் பார்த்­தால், அடுத்த எட்­டாண்­டு­களில் அமெ­ரிக்கா, சீனா அல்­லது ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லுள்ள எந்­த­வொரு நாட்­டைக் காட்­டி­லும் சிங்­கப்­பூ­ரில் அதி­கச் செல்­வந்­தர்­கள் இருப்­பர் என்று எச்­எஸ்­பிசி வங்கி தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரி­ல் உள்ள பெரி­ய­வர்­களில் 7.5 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$1.38 மி.) சொத்து மதிப்­பைக் கொண்­டி­ருந்­த­னர். இவ்­வி­கி­தம் 2025ஆம் ஆண்­டில் 9.8 விழுக்­கா­டா­க­வும் 2030ஆம் ஆண்­டில் 13.4 விழுக்­கா­டா­க­வும் உய­ரும் என்று எச்­எஸ்­பிசி ஆய்­வ­றிக்கை கூறு­கிறது.

குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் என உள்­ளூர்­வா­சி­கள் மட்­டும் இந்த ஆய்­வில் கணக்­கில் எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­னர்.

வங்­கிக் கணக்­கு­களில் உள்ள ரொக்­கம், பங்­கு­கள், முறி­கள் போன்ற முத­லீட்­டுப் பத்­தி­ரங்­கள், அசை­யாச் சொத்­து­கள், செலுத்த வேண்­டிய கடன் ஆகி­ய­வற்­றைக் கொண்டு, செல்­வந்­தர் ஒரு­வ­ரின் சொத்து மதிப்பு கணக்­கி­டப்­பட்­ட­தாக எச்­எஸ்­பிசி வங்கி விளக்­கியது.

மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில், ஆசி­யா­வில் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக அதி­கச் செல்­வந்­தர்­கள் இருப்­பது சிங்­கப்­பூ­ரில்­தான். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கடந்த ஆண்டு எட்டு விழுக்­காட்­டி­னர் செல்­வந்­தர்­க­ளாக இருந்­த­னர்.

ஆயி­னும், 2030ல் 12.5 விழுக்­காட்­டு­டன் ஆஸ்­தி­ரே­லியா இரண்­டாம் நிலைக்கு இறங்­கி­வி­டும் என்று எச்­எஸ்­பிசி கணித்­துள்­ளது.

அவ்­வாண்­டில் ஹாங்­காங்­கில் 11.1 விழுக்­காட்­டி­ன­ரும் அமெ­ரிக்­கா­வில் 9 விழுக்­காட்­டி­ன­ரும் ஜப்­பா­னில் 7.2 விழுக்­காட்­டி­ன­ரும் சீனா­வில் 4.4 விழுக்­காட்­டி­ன­ரும் செல்­வந்­தர்­க­ளாக இருப்­பர்.

குறைந்­தது 250,000 அமெ­ரிக்க டாலர் சொத்து மதிப்­பைக் கொண்­டுள்ள சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் விகி­தம் 2030ஆம் ஆண்­டில் 67 விழுக்­கா­டாக உய­ரும் என்­றும் அந்த ஆய்­வ­றிக்கை குறிப்­பி­டு­கிறது.

அத்­து­டன், ஆசி­யா­வில் 2030க்குப் பிற­கும் செல்­வந்­தர்­களின் எண்­ணிக்கை தொடர்ந்து உய­ரும் என்­றும் 2035ல் சிங்­கப்­பூரில் 17 விழுக்­காட்­டி­ன­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 15.1 விழுக்­காட்­டி­ன­ரும் செல்­வந்­தர்­க­ளாக இருப்­பர் என்­றும் அவ்­வ­றிக்கை தெரி­விக்­கிறது.