அழகு நிலையத்தின் இரு கிளைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

அழகு நிலையத்தின் இரு கிளைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
eb0a6398-f893-4ed7-b29a-1ae05de3ac71
-

நகப் பூஞ்சைத்தொற்று சிகிச்சைத் தொகுப்பிற்குப் பதிவுசெய்வது தொடர்பில் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துவதை நிறுத்தும்படி 'நெய்ல் பேலஸ்' அழகு நிலையத்தின் இரு கிளைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங் பிளாசாவிலும் ஈஸ்ட் பாய்ண்ட் மால் கடைத் தொகுதியிலும் உள்ள அதன் இரு கிளைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிக்கும்படி சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கோரியிருந்தது.

அவ்விரு கிளைகளும் பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாய வணிகம்) சட்டத்தின்கீழ் நியாயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மாவட்ட நீதிபதி இலேய்ன் லிம் அறிவித்தார்.