உற்பத்தித் துறையில் நீடித்த நிலைத்தன்மை: புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சிகள்

உற்பத்தித் துறையில் நீடித்த நிலைத்தன்மை: புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சிகள்

2 mins read
c0ee36f3-c136-4b4a-9a3d-6095b80761c3
-

உற்­பத்­தித் துறை­யில் நீடித்த நிலைத்­தன்­மையை அதி­க­ரிப்­ப­தற்கு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் பயிற்சி வகுப்­பு­கள் தொடங்­கப்­ப­ட­வுள்­ளன. எச்பி கணினி நிறு­வ­ன­மும் எஸ்­ஐ­எம் எனப்­படும் சிங்­கப்­பூர் நிர்­வாகக் கழகமும் இணைந்து அடுத்த மாதம் அந்­தப் பயிற்சி வகுப்­பு­ களைத் தொடங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் 2030 பசு­மைத் திட்­டத்­துக்கு புதிய பயிற்சி வகுப்­பு­கள் உத­வும் என்று எஸ்­ஐ­எம் நேற்று கூறி­யது. நீடித்த நிலைத்­தன்­மை­மிக்க மேம்­பாட்டை முன்­னெ­டுப்­பது தேசிய இயக்­க­மான 2030 சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் 15 பயிற்சி வகுப்­புத் திட்­டங்­கள் அறி­மு­கம் செய்­யப்­படும். அவற்­றின் மூலம் 180 நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 1,500க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் பய­ன­டை­வார்­கள். பயிற்சி வகுப்­பு­கள் இரண்­டி­லி­ருந்து நான்கு நாள்­கள் வரை நடத்­தப்­படும்.

வடி­வ­மைப்பு சிந்­த­னை­யின் மூலம் மின்­னி­லக்க உரு­மாற்­றம், பசுமை வடி­வ­மைப்பு நடை­மு­றை­கள் போன்ற தலைப்­பு­களில் பாடம் எடுக்­கப்­படும். ஆர்­வம் உள்­ள­வர்­கள், மைஸ்­கில்ஸ்­ஃபி­யூச்­சர், எஸ்­ஐ­எம் இணை­யத்­த­ளங்­க­ளுக்­குச் சென்று பயிற்­சிக்­குப் பதிவு செய்­து­கொள்ள லாம்.

தெலுக் பிளாங்­கா­வில் உள்ள எச்பி நிறு­வ­னத்­தின் வளா­கத்­தில் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர், எஸ்­ஐ­எம் அமைப்­பு­களும் எச்பி நிறு­வ­ன­மும் பயிற்சி வகுப்­பு­கள் பற்­றிய புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டன. அதன்­படி, உற்­பத்தி துறை­யில் உள்ள சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­ க­ளுக்­குப் பயிற்சி வழங்க ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் அமைப்பு தேர்வு செய்த 'ராணித்­தேனீ' அமைப்­பாக எச்பி நிறு­வ­னம் செயல்­படும்.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் அமைப்பு தொழில்­து­றை­யில் முன்­னணி வகிக்­கும் இத்­த­கைய 20க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களை 'ராணித் தேனீ' நிறு­வ­னங்­க­ளாக நிய­மித்­துள்­ளது. ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த தொழில்­நுட்­பப் பெரு­நி­று­வ­ன­மான சீமன்ஸ் நிறு­வ­ன­மும் அவற்­றில் ஒன்­றா­கும்.

தொழில்­து­றை­யில் இருக்­கும் முன்­ன­ணி­நிலை, வர்த்­த­கத் தொடர்­பு­களில் மற்ற நிறு­வ­னங்­க­ளின்­மீது செல்­வாக்கு செலுத்­தும் ஆற்­றல் போன்­ற­வற்­றைக் கொண்டு 'ராணி தேனீ' நிறு­வ­னங்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்­றன.

மற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் புதிய திறன்­க­ளைப் பற்­றிய தக­வல்­களை எச்பி போன்ற முன்­னணி தொழில்­துறை நிறு­வ­னங்­க­ள் அளிக்­கும் என்று ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் அமைப்­பின் தலைமை நிர்­வாகி டான் கொக் யாம் கூறி­னார்.