கடவுச்சீட்டுக்குத் இப்போதே விண்ணப்பிக்கும்படி குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் வலியுறுத்து

கடவுச்சீட்டுக்குத் இப்போதே விண்ணப்பிக்கும்படி குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் வலியுறுத்து

2 mins read
a7151631-162a-4f7f-9785-1da2d3d7a1a5
-

ஆண்­டி­று­தி­யில் வெளி­நாட்­டுப் பய­ணம் செல்­லத் திட்­ட­மி­டும் சிங்­கப்­பூ­ரர்­களை இப்போதே பாஸ்­போர்ட் எனப்­படும் கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கும்­படி குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­ ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. காலா­வ­தி­யான அல்­லது ஆறு மாதம் செல்­லு­படியாகும் காலம் இல்­லாத கட­வுச்­சீட்­டு­கள் வைத்­தி­ருப்­ப­வர்­களை ஆணை­யம் குறிப்­பிட்­டுச் சொன்­னது,

ஆண்­டி­று­தி­யில் விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை வெகு அதி­க­மாக உயர்­வதை இது தடுக்­கும் என்று ஆணை­யம் கூறி­யது. ஆண்­டி­று­திப் பய­ணத் தேவை­க­ளுக்கு ஏற்ப விண்­ணப்­பங்­களை செயல்­மு­றைப்­ப­டுத்த தனக்கு இது கூடு­தல் அவ­கா­சம் அளிக்­கும் என்று அது குறிப்­பிட்­டது.

இரண்டு ஆண்­டு­க­ளாக முடங்­கி­யி­ருந்த பய­ணங்­கள் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அதி­க­ரித்­த­போது கட­வுச்­சீட்­டு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­கள் பெரு­ம­ளவு கூடின. அவற்­றைச் சமா­ளிக்க குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­ ஆணை­யம் திண­றி­யது. ஒரு­ சி­ல­ருக்கு ஆறு வாரங்­கள் கழித்­து­தான் கட­வுச்­சீட்டு கையில் கிடைத்­தது. இத­னால் இம்­முறை முன்­கூட்­டியே ஆணை­யம் இவ்­வாறு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

தாம­த­மாக விண்­ணப்­பம் செய்­ ப­வர்­க­ளுக்கு உரிய நேரத்­தில் கட­வுச்­சீட்­டு­கள் கிடைக்­கா­மல் போக­லாம் என்று ஆணை­யம் எச்­ச­ரித்­தது.

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளம் அல்­லது செய­லிக்­குச் சென்று கட­வுச்­சீட்­டு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம். இணை­யத்­த­ளத்­துக்­குச் சென்று கட­வுச்­சீட்டு தயா­ராகி விட்­டதா என்­றும் பார்க்­க­லாம்.

தேவை­யற்ற கால­தா­ம­தத்­தைத் தவிர்க்க, இணை­யத்­தில் உள்ள வழி­காட்­டி­க­ளைப் படிக்­கும்­படி சொந்­த­மா­கப் புகைப்­ப­டம் எடுத்­துக் கொள்­ப­வர்­க­ளி­டம் ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யது.

புகைப்­ப­டங்­கள் பாஸ்­போர்ட் வழி­காட்­டி­க­ளுக்கு ஏற்ப இல்­லா­விட்­டால் விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­ப­ட­லாம் என்று அது கூறி­யது.

மாறு­தல் இல்­லாத வெளிச்­சத்­தில், மூன்று மாதங்­க­ளுக்­குள் புகைப்­ப­டம் எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். முகத்­தில் எந்த உணர்­வும் இருக்­கக்­கூ­டாது என்று ஆணை­யம் கூறி­யது.