பசுமைப் பொருளியலுக்கு மாறுவது முறையானதாக இருப்பது அவசியம்

உல­க­ளா­விய பொரு­ளி­ய­லில்

கரி­மம் அறவே இல்­லாத நிலையை உரு­வாக்­கி­னால் அது பண­வீக்­கத்தை ஏற்படுத்தும் என்­றும் ஊழி­யர் சந்­தை­யில் பெரு­ம­ள­வி­லான பின்­ன­டை­வு­களை உண்டாக்கும் என்­றும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர்

ரவி மேனன் தெரி­வித்­துள்­ளார்.

இருப்­பி­னும், பசு­மைப்

பொரு­ளி­ய­லுக்கு மாறு­வது முறை­யா­ன­தாக இருந்­தால் பண­வீக்­க­மும் ஊழி­யர் சந்­தை­யில் ஏற்­படும் இடை­யூ­று­களும் சமா­ளிக்­கக்கூடிய அள­வில் இருக்­கும் என்­றார் அவர்.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மன்­றத்­தின் வரு­டாந்­திர விழா­வில் கூடி­யி­ருந்­தோ­ரி­டம் திரு ரவி பேசி­னார்.

திரு ரவிக்கு கொவிட்-19

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, அவர் இணை­யம் மூலம் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

பசு­மைப் பொரு­ளி­ய­லுக்கு முறை­யான வகை­யில் மாறி­னா­லும்

கரி­மம் அறவே இல்­லாத இலக்கை அடைய, வரி­கள் உயர்த்­தப்­ப­டும்­போது பண­வீக்­கம் உயரும் என்று திரு ரவி எச்சரித்தார்.

"கரி­மத்­தின் விலை நியா­ய­மா­ன­தாக இருந்­தால் அது பொரு­ளி­யல் ரீதி­யாக வலு­வான சமிக்­ஞை­களை அனுப்­பி­வைக்­கும்.

"கரி­மத்தை அதி­கம் கொண்­டுள்ள பொருள்­கள், சேவை­­கள் ஆகி­ய­வற்­றுக்­கான தேவையைக் குறைத்­துக்­கொள்ள பய­னீட்­டா­ளர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர்.

"அது­மட்­டு­மல்­லாது, குறைந்த கரி­மத் தொழில்­நுட்­பங்­க­ளுக்கு மாற­வும் நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­படும். குறைந்த கரிம அள­வைக் கொண்ட பொருள்­க­ளைக் கண்­டு ­பி­டித்து உற்­பத்தி செய்­யும் முனைப்பை ஏற்­ப­டுத்­தும். இத்­

த­கைய பொருள்­கள் தொடர்­பாக மூத­லீடு செய்து வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­

க­ரிக்­கும்," என்று திரு ரவி தெரி­வித்­தார்.

இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பால் பல பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் அதன் விளைவாக ஒட்டுமொத்த அடிப் படையில் விலை ஏற்றமும் ஏற்படும் என்றார் அவர்.

"முன்­பை­விட பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும் என நினைக்­கி­றேன்," என்று திரு ரவி கூறி­னார்.

கடந்த பத்து ஆண்­டு­களில் ஏற்­பட்ட நிலையை அவர் சுட்­டி­னார். அப்­போது பண­வீக்­கம் மிக­வும் குறை­வாக இருந்­தது. அத­னால் பெரிய பணக்கார நாடு­க­ளின் மத்­திய வங்கி­கள் அவற்­றின் வட்டி விகி­தத்தைக் கிட்­டத்­தட்ட பூஜ்­யத்­துக்­குக் குறைத்­தன. சிங்­கப்­பூ­ரில் கடந்த பத்­தாண்­டு­களில் பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீடு சரா­ச­ரி­யாக 1.5 விழுக்­கா­டு உயர்ந்து வந்துள்ளது என்றார் அவர்.

ஆனால் சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் இவ்­வாண்டு ஜூன் மாதத்­தில் கடந்த பத்து ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் 6.7 விழுக்­கா­டா­கப் பதி­வாகி புதிய உச்­சத்தை எட்­டி­யது.

க­டந்த மாதம் பிரிட்­ட­னில் பண­வீக்­கம் 10.1 விழுக்­கா­டா­கப் பதி­வாகி கடந்த 40 ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் புதிய உச்­சத்தை எட்­டி­யது.

கரி­மத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தும் துறை­களில் பலர் வேலை இழப்­பர் என்று கூறிய திரு ரவி, கரி­மம் தொடர்­பாக நடு­நி­லை­யு­டன் இருக்­கும் துறை­களில் புதிய வேலை­கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!