அண்டைவீட்டுக்காரர் குளிப்பதை அவருக்குத் தெரியாமல் பார்க்க அந்த வீட்டின் மாடி முகப்பு வழியாக ஏறி வீட்டிற்குள் நுழைந்தார் முன்னாள் வழக்கறிஞரான 32 வயது நிக்கலஸ் இயோ ஷாவ் யி.
இவ்வாறு அவர் இரண்டு முறை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இயோவின் அண்டைவீட்டுக்காரப் பெண் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்.
அவர் குளிப்பதை இயோ ஒருமுறை காணொளி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இயோவுக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அண்டைவீட்டுக்காரர் குளிப்பதைப் பார்தததாகவும் அதைக் கைபேசி கொண்டு காணொளி எடுத்ததாகவும்அ வர் ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றத்தை இயோ 2020ஆம் ஆண்டில் புரிந்தார். அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தி
லிருந்து ஜூன் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட கிருமிப்
பரவல் முறியடிப்பு திட்டத்தால் வேலை தொடர்பாக மனவுளைச்சல் ஏற்பட்டு இயோ இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவர் ஆலன் அண்ட் கிளேட்ஹில் எனும் பிரபல சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்த வேலையிலிருந்து அவர் விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று அப்பெண் குளிப்பதை இயோ காணொளி எடுக்க முயன்றபோது கையும் களவுமாகச் சிக்கினார்.
இயோ காணொளி எடுக்கத் தொடங்குவதற்கு முன்பு, அப்பெண் அவரைப் பார்த்துவிட்டதாகவும் பதற்றத்தில் அலறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இயோ உடனடியாக தமது வீட்டிற்குத் தப்பி ஓடினார். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கோபத்துடன் இயோவின் வீட்டிற்குச் சென்றனர். இயோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இயோவின் கைபேசியை அப்பெண் எடுத்துப் பார்த்ததாகவும் அதில் முறையற்ற காணொளிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் காவல்
துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இயோவுக்குச் சொந்தமான இரண்டு மடிக்கணினிகளையும் நான்கு ஐஃபோன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு அப்பெண் குளிப்பதை இயோ காணொளி எடுத்து அந்தப் பதிவை நீக்கியது விசாரணையில் தெரியவந்தது.

