அல்ஜுனிட் அடுக்குமாடி வீட்டில் தீ; மெழுகுவத்தியால் ஏற்பட்டிருக்கலாம்

அல்ஜுனிட் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று(ஆகஸ்ட் 18) தீ மூண்டது. அதனைத் தொடர்ந்து 13 பேர் அந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்பர் அல்ஜுனிட் லேன் புளோக் 3ன் ஆறாம் மாடி வீட்டின் வரவேற்பு அறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவத்தியால் தீ  மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தீச்சம்பவம் பற்றி காலை 7.05 மணிக்குத் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை வருவதற்குள் புளோக்கில் உள்ள மூவர் சுயமாகவே வெளியேறிவிட்டனர். அருகில் உள்ள வீடுகளிலிருந்து 10 பேர் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வீட்டில் தனியாக வசிக்கும் திருவாட்டி டியோ பொங் சீ,75, அதிகாலை உடற்பயிற்சி செய்துவிட்டு வழிபாட்டு மேடையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைத்ததாகக் கூறினார்.

ஐந்து நிமிடம் ஏற்றி வைத்த சிறிய ஒரு மெழுகுவத்தியால் ஒரு வீடே அழிந்துவிடும் என்று சிறிதும் நினைக்கவில்லை என்றார் அவர். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!