‘இன நல்லிணக்கத்தைப் பேணுதல் தொடர்ச்சியான பணி’

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு கடின முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் இன, சமய விவகாரங்கள் அவ்வப்போது தலைதூக்கக்கூடும் என்பதால் அந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் கலப்­பி­னத் தம்­ப­திக்கு எதி­ராக இன­வா­தக் கருத்­து­கள் கூறப்­பட்ட சம்­ப­வத்தையும் சென்ற ஆண்டு மே மாதத்­தில் இந்­திய சிங்­கப்­பூ­ர­ரான மாதை ஆட­வர் ஒரு­வர் தாக்­கிய சம்­ப­வத்­தை­யும் திரு­வாட்டி சுன் நினை­வு­கூர்ந்­தார். இன­வா­தச் சம்­ப­வங்­கள் அனைத்­துமே வெளிச்­சத்­துக்கு வரு­வ­தில்லை என்று கூறிய அவர், இத்­த­கைய சம்­ப­வங்­கள் நம் அக்­கம்­பக்­கத்­திலோ பள்­ளி­க­ளிலோ வேலை­யி­டங்­க­ளிலோ நடை­பெ­றக்­கூ­டும் என்­ப­தைச் சுட்­டி­னார்.

'எஸ்ஜி கோர்' எனும் ஒற்­றுமை, மீள்­தி­ற­னுக்­கான முன்­னோ­டிப் பயிற்­சித் திட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­க­ளி­டையே அவர் உரை­யாற்­றி­னார். 'ஹியு­மே­னிட்டி மேட்­டர்ஸ்' எனும் லாப நோக்­க­மற்ற அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த பயிற்­சித் திட்­டத்­தில் 400 பேர் பங்­கேற்­ற­னர். இவர்­கள் அனை­வ­ரும் பாது­காப்­புத் துறை­யில் பணி­யாற்­று­ப­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரின் பல கலா­சார உணர்வை வலி­யு­றுத்­து­வ­தும் நாட்­டின் சமு­தாய, பாது­காப்பு உணர்­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தும் இந்­தத் திட்­டத்­தின் நோக்­கங்­கள்.

இதில் மேலும் இத்­த­கைய 19 குழுக்­களை ஈடு­ப­டுத்­து­வது இலக்கு. சீரு­டைப் பிரி­வி­னர், பாது­காப்பு தொடர்­பான வேலை­களில் இருப்­போர், தேசிய சேவை­யி­னர், உள்­துறை அமைச்சு, தற்­காப்பு அமைச்சு ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் போன்­றோர் இந்­தப் பயிற்­சி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

முன்­னோ­டிப் பயிற்­சி­யின் நிறைவு நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய திரு­வாட்டி சுன் ஷுவெ­லிங், சிங்­கப்­பூ­ரில் தற்­போது நில­வும் ஒற்­றுமை, இன, சமய நல்­லி­ணக்­கம் ஆகி­யவை இயல்­பாக ஏற்­பட்­ட­தல்ல என்று கூறி­னார்.

"கடின முயற்­சி­யின் பலன் இது; 1964ஆம் ஆண்டு நடந்த கல­வ­ரத்­துக்­குப் பிறகு மிகுந்த கவ­னத்­து­டன் பேணப்­பட்ட அம்­சம் இது,' என்­றார். இது தொடர்ந்து செய்­யப்­ப­ட­வேண்­டிய பணி; ஏனெ­னில் பழைய நிலைக்கு எளி­தில் திரும்­பு­வது மனித இயல்பு என்று துணை­ய­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகரிக்கும் சூழல், சமூக ஒற்றுமைக்குச் சவாலானது. பயங்கரவாத மிரட்டல் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வேற்றுமையை விதைக்கக் கூடியது என்றார் அவர்.

நாட்­டின் நல்­லி­ணக்­கத்­தைக் கீழ­றுக்­கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கம் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கிறது. இருப்­பி­னும் சக சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் வலு­வான புரி­த­லை­யும் நம்­பிக்­கை­யை­யும் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள ஒன்­று­பட்ட முயற்­சியை நாம் மேற்­கொள்­வது அவ­சி­யம். இன­வா­தத்தை அதை­வி­டக் கூடு­த­லான இன­வா­தத்­தாலோ தீவி­ர­வா­தத்தை அதை­வி­டக் கூடு­த­லான தீவி­ர­வா­தத்­தாலோ எதிர்­கொள்­ளக் கூடாது என்­பதை நாம் நினை­வு­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!