ஈராண்டில் ஒரு மில்லியன் இலவச உணவுப் பொட்டலங்கள்

ஈராண்டில் ஒரு மில்லியன் இலவச உணவுப் பொட்டலங்கள்

1 mins read
27cc0936-e169-4b14-bdfb-81e85fb854db
உணவு வங்கிக் கிடங்கில் நன்கொடையாகத் தரப்பட்ட உணவுப் பொருள்களை வகைப்படுத்தும் தொண்டூழியர்கள். படம்: சிங்கப்பூர் உணவு வங்கி -

சில்­லறை விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்ள 'டிஎ­ஃப்ஐ' குழு­மம் அடுத்த ஈராண்­டில் சிங்­கப்­பூ­ரில் உள்ள வச­தி­கு­றைந்­தோ­ருக்கு ஒரு மில்­லி­யன் உண­வுப் பொட்­ட­லங்­களை இல­வ­ச­மாக வழங்­கத் திட்­ட­மிட்­டு உள்­ளது.

பண­வீக்­கத்­தால் விலை­வாசி உயர்ந்­துள்ள நேரத்­தில் இது பொருத்­த­மான முயற்­சி­யாக இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் சிங்­கப்­பூர் உணவு வங்­கி­யு­டன் இணைந்து 'சாப்­பிட்­டு­விட்­டீர்­களா?' எனும் திட்­டத்தை 'டிஎ­ஃப்ஐ' குழு­மம் தொடங்­கி­யுள்­ளது. உண­வுப் பாது­காப்பை மேம்­ப­டுத்த எடுக்­கப்­படும் தொடர் முயற்­சி­க­ளின் ஓர் அங்­கம் இது என்று 'டிஎ­ஃப்ஐ' குழு­மம் கூறி­யது.

ஹாங்­காங், மலே­சியா, சிங்­கப்­பூர் ஆகி­ய­வற்­றில் 10,200 கடை­களை இந்­நி­று­வ­னம் நடத்­து­கிறது. சிங்­கப்­பூ­ரில் ஜயண்ட், கோல்ட் ஸ்டோ­ரேஜ், சிஎஸ் ஃபிரெஷ், கார்­டி­யன், 7-இலெ­வன் ஆகி­யவை இதன்­கீழ் செயல்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் இந்­தக் கடை­களில் வாங்­கும் ஒவ்­வொரு கிலோ­கி­ராம் அரி­சிக்­கும் பத்து காசு சிங்­கப்­பூர் உணவு வங்கி ஆத­ர­வுத் திட்­டத்­திற்­குச் செல்­லும். இதற்கு ஆத­ர­வ­ளிப்­பதை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் நாளை வரை ஜயண்ட் பேரங்­கா­டி­யில் அனைத்து ரக அரி­சிக்­கும் 15 விழுக்­காட்டு கட்­ட­ணத் தள்­ளு­படி வழங்­கப்­படும்.

திட்­டத்­தின்­கீழ் பல­ன­டை­வோ­ருக்கு 15 வெள்ளி மதிப்­பு­மிக்க மொத்­தம் 1,000 பரா­ம­ரிப்­புப் பொட்­ட­லங்­கள் விநி­யோ­கிக்­கப்­படும். இவற்­றில் அரிசி, கேனில் அடைக்­கப்­பட்ட உண­வுப் பொருள்­கள் போன்­றவை இருக்­கும் எனக் கூறப்­பட்­டது.