லஞ்சம்: ஆடவருக்கு 15 வார சிறை, லஞ்சத்தொகை $16,134 அபராதம்

லஞ்சம்: ஆடவருக்கு 15 வார சிறை, லஞ்சத்தொகை $16,134 அபராதம்

1 mins read
8cbbe0c1-4145-4389-9e55-2675aefee245
-

கப்­பல்­களில் ஏற்­றப்­பட்ட ெஷல் எரி­வாயு எண்­ணெய்­யின் அளவை முறை­யற்ற அள­வில் அறி­வித்து தில்­லு­முல்லு செய்­வ­தைக் கண்­டு­கொள்­ளா­மல் இருப்­ப­தற்­காக சோதனை அள­வீட்­டா­ளர் ஒரு­வ­ருக்கு 12,000 அமெ­ரிக்க டாலர் (S$16,134) லஞ்­ச­மா­கத் தரப்­பட்­டது.

கும­ணன் ரெத்­ன­கு­மா­ரன், 40, எனப்­படும் அந்த அள­வீட்­டா­ள­ரின் உத­வி­யால் ஷெல் எரி­வாயு எண்­ணெய்யின் அள­வில் இரு கையா­டல் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றன.

2016ஆம் ஆண்­டு நடை­பெற்ற அந்த மோச­டி­யின் மதிப்பு 634,000 அமெ­ரிக்க டாலர். அது அப்­போது கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

'சிசி­ஐசி சிங்­கப்­பூர்' என்­னும் சரக்கு சோத­னைச் சேவை நிறு­

வ­னத்­தில் அப்­போது பணி­யாற்­றிய கும­ணன் ரெத்­ன­கு­மா­ரன் லஞ்­சம் பெற்­ற­தாக ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து நேற்று அவ­ருக்கு 15 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. லஞ்­சத் தொகை­யைத் திருப்­பித் தரும் வித­மாக $16,134 அப­ரா­த­மும் அவ­ருக்கு விதிக்­கப்­பட்­டது.