முழு அபராதம் செலுத்த மறுப்பதால் 3 நாள்கள் சிறையிலிருக்க நேரிடும்

முழு அபராதம் செலுத்த மறுப்பதால் 3 நாள்கள் சிறையிலிருக்க நேரிடும்

2 mins read
1e34e991-e052-40b6-93a4-c579ac2f18ec
-

கில்­பர்ட் கோ என்று அழைக்­கப்­படும் கோ கியோ வா, 61, (படம்) என்­னும் பொது­நல ஆர்­வ­ல­ர் தமக்கு எதிராக விதிக்­கப்­பட்ட $3,200 அப­ரா­தத்தை முழு­மை­யா­கச் செலுத்­தத் தயா­ராக இல்லை என அறி­யப்­ப­டு­கிறது.

காலாங் ரோட்­டிலுள்ள குடி­

நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யக் கட்­ட­டத்­திற்கு வெளியே கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அனு­ம­தி­யின்றி நடத்­தப்­பட்ட பொது ஒன்றுகூட­லில் பங்­கேற்­ற­தற்­காக நேற்று கோவுக்கு $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அந்த ஒன்­று­கூ­ட­லில், "இந்­தி­யா­வி­லி­ருந்து வரும் எல்லா விமா­னங்­க­ளை­யும் தயவுசெய்து தடை செய்­யுங்­கள். நாம் இன­வாதி அல்ல. எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க இந்­தக் கோரிக்கை," என்று பொருள்­ப­டக்­கூ­டிய வாசக அட்­டையை கோ ஏந்தி இருந்­தார். பின்­னர், ஒன்­று­கூ­ட­லில் தமது நட­வ­டிக்கை தொடர்­பான படங்­களை ஃபேஸ்புக்­கில் அவர் பதி­வேற்­றி­னார்.

இந்­தி­யா­வில் கொவிட் -19 சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த நேரம் அது. அத­னால் இந்­தி­யாவி­லி­ருந்து வரக்­கூ­டிய எல்லா நீண்­ட­கால, குறு­கி­ய­கால அனு­மதி அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் 14 நாள்கள் தடை விதித்­தி­ருந்­தது.

அனுமதிபெறாத ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றது தொடர்­பாக காவல்­து­றை­யி­டம் வாக்குமூலம் அளித்த கோ, அதற்­கான பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்­திட மறுத்­தார். அதற்காக அவ­ருக்­குக் கூடுதலாக $1,200 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், மொத்த அப­ரா­தத் தொகை­யில் $2,000ஐ மட்­டும் செலுத்த தமது கட்­சிக்­கா­ரர் தயா­ராக இருப்­ப­தாக தற்­காப்பு வழக்

கறி­ஞர் லிம் தியன் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார். எஞ்­சிய தொகை $1,200ஐ கட்­டத் தவ­றி­னால் அதற்கு ஈடாக மூன்று நாள்­களை கோ சிறை­யில் கழிக்­க­வேண்டி வரும்.