பல்லாண்டுகளாக பல பெண்களிடம் மோசடி

பல்லாண்டுகளாக பல பெண்களிடம் மோசடி

1 mins read
ce190ae4-64a9-4518-9fa2-157100b733e5
-

பத்து பெண்­க­ளி­டம் $72,000 மோசடி செய்த குற்­றத்­திற்­காக பிர­பல மோச­டி­யா­ள­ருக்கு நேற்று ஒன்­பது ஆண்டு சீர்­தி­ருத்­தப் பயிற்சி தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டது.

மீண்­டும் மீண்­டும் குற்­றம் புரிவோருக்கான சிறைக்­கூ­டம்­ தான் சீர்­தி­ருத்­தப் பயிற்சி. டான் சிப் ஹுவாட், 49, எனப்­படும் அந்த ஆட­வர் 2013ஆம் ஆண்டு முதல் பல பெண்­க­ளி­டம் மோசடி செய்­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார். அதற்­காக அவர் சிறை சென்­றார். 2020ஆம் ஆண்டு விடு­

த­லை­யா­ன­தும் மீண்­டும் குற்­றம் செய்து சிறை சென்­றார்.

$46,000 மதிப்­புள்ள மோச­டிக் ­குற்­றங்கள் தொடர்­பாக தம் மீது சுமத்­தப்­பட்ட ஏழு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார். பாலியல் சுகம் அனுபவித்த பின் அதற்குப் பணம் தராமல் செய்த மோசடிகளும் அதில் அடங்கும்.