நாட்டைவிட்டு தப்பியோடி, ஜோகூரில் பிடிபட்ட தம்பதிக்கு மேலும் ஒரு வாரம் சிறைக் காவல்

நாட்டைவிட்டு தப்பியோடி, ஜோகூரில் பிடிபட்ட தம்பதிக்கு மேலும் ஒரு வாரம் சிறைக் காவல்

2 mins read
a03db4b5-ed27-445e-999e-cee41f81915f
$32 மில்லியன் மோசடி தொடர்பாக விசாரிக்கப்படும் பை ஜியாங் கும் அவரது தாய்லாந்து மனைவி பான்சுக் ஸ்ரீவாபாவும் (மேல் படம்). படங்கள்: எஸ்பிஹெச் -
multi-img1 of 2

ஆடம்­ப­ரப் பொருள் மோச­டி­யில் சம்­பந்­தப்­பட்ட தம்­ப­தி­யி­ன­ரி­டம் விசா­ரணை நடத்த மேலும் சில காலம் தேவைப்­ப­டு­வ­தா­ல் அந்­தத் தம்­ப­திக்­கான விசா­ர­ணைக் காவல் மேலும் ஒரு வாரம் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

கிட்­டத்­தட்ட $32 மில்­லி­யன் மதிப்­புள்ள ஆடம்­ப­ரப் பொருள்­களை அவற்றை வாங்­கி­யோ­ருக்கு விநி­யோ­கிக்­கா­மல் தலை­ம­றை­வாகி பிடி­பட்ட பை ஜியா­பெங், 26, என்­ப­வ­ரும் அவ­ரது தாய்­லாந்து மனைவி பான்­சுக் ஸ்ரீவாபா, 27, என்­ப­வ­ரும் தங்­கள் சார்­பாக வழக்­க­றி­ஞர்­களை நிய­மித்து உள்­ள­னர்.

தம்­ப­தி­யி­ன­ருக்கு எதி­ராக காவல்­து­றை­யில் 180 புகார்­கள் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­லும் இவர்­கள் தொடர்­பான வழக்கு சிக்­கல் நிறைந்­தது என்­ப­தா­லும் தீர விசா­ரிக்­கப் போது­மான அவ­கா­சம் தேவைப்­ப­டு­வ­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"இந்த வழக்கு $20 மில்­லி­யன் இழப்பு தொடர்­பா­னது. மேலும், பொருள்­களை வாங்க 'டிரேட்­நே­ஷன்', 'டிரேட் லக்­ஷுரி' என்­னும் இரு நிறு­வ­னங்­க­ளி­டம் தரப்­பட்ட தொகை எங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை அறிய விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்­குக் கூடு­தல் காலம் தேவைப்­ப­டு­கிறது," என்­றார் அந்த வழக்­க­றி­ஞர்.

ஆடம்­பரக் கைப்­பை­கள், ஆடம்­பரக் கைக்­க­டி­கா­ரங்­கள் விற்­ப­தாக இரு நிறு­வ­னங்­களும் கூறி­ய­தைத் தொடர்ந்து பல­ரும் அவற்­றுக்­கா­கப் பணம் செலுத்­தி­னர்.

ஆனால் அவர்­க­ளுக்­குப் பொருள்­கள் போய்ச் சேர­வில்லை. இவ்­வாண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை வாடிக்­கை­யா­ளர்­களை மோசடி செய்த குற்­றத்­துக்­காக பை ஜியா­பெங் ஜூன் 27ஆம் தேதி கைது செய்­யப்­பட்­டார். அவ­ரும் அவ­ரது மனை­வி­யும் கடப்­பி­தழ்­களை அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைத்­த­னர். ஜூன் 28ஆம் தேதி பை ஜியா­பெங் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

ஆனால், ஜூலை 4ஆம் தேதி முதல் இரு­வ­ரும் தலை­ம­றை­வா­யி­னர். நாட்­டை­விட்­டுத் தப்­பிச் சென்­ற­தாக நம்­பப்­பட்­டது. அவர்­க­ளுக்கு எதி­ரா­கக் கைது ஆணை­யும் இண்­டர்­போல் எனப்­படும் அனைத்­து­ல­கக் காவல்­து­றை­யின் தேடு­தல் எச்­ச­ரிக்கை அறி­விப்­பும் விடுக்­கப்­பட்­டன.

தீவிர தேடு­த­லின் விளை­வாக ஆகஸ்ட் 11ஆம் தேதி அந்­தத் தம்­ப­தி­யி­னர் ஜோகூ­ரில் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளைக் கைது செய்த அரச மலே­சிய காவல்­துறை அதே நாளில் இரு­வ­ரை­யும் சிங்­கப்­பூர் காவல்­து­றை­

யி­டம் ஒப்­ப­டைத்­தது.

அன்­றைய தினம் தம்­ப­தி­யி­னர் மீது இரண்டு மோச­டிக் குற்­றச்­சாட்­டு­களும் நாட்­டை­விட்டு சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­யே­றி­ய­தாக ஒரு குற்­றச்­சாட்­டும் சுமத்­தப்­பட்­டன.