$8.9 மில்லியன் மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் 99 பெண்கள் உட்பட 325 பேரிடம் விசாரணை

சிங்­கப்­பூ­ரில் $8.9 மில்­லி­யன் மதிப்­புள்ள மோச­டி­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் 226 ஆண்­க­ளி­ட­மும் 99 பெண்­க­ளி­ட­மும் காவல்

­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இவர்­கள், பொது­மக்­கள் அளித்த 943 மோச­டிப் புகார்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளா­கவோ அல்­லது மோச­டிக்கு உத­வி­ய­வர்­க­ளா­கவோ இருக்­க­லாம் என சந்­தே­கிக்­கப்­

ப­டு­கிறது.

இதனை காவல்­துறை நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் 16 வய­துக்­கும் 73 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­றும் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 18 வரை இரு­வார காலம் நடத்­தப்­பட்ட தேடு­தல் வேட்­டை­யில் பிடி­பட்­ட­வர்­கள் என்­றும் அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

பண மோசடி, கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­று­தல், உரி­மம் இன்றி பண­ம­ளிப்புச் சேவை­ போன்­ற­ வற்­றில் ஈடு­பட்ட சந்­தே­கத்­திற்­காக இவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

மோச­டிக் குற்­றத்­திற்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை அல்­லது அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றத்­திற்­கும் 10 ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். மேலும், $500,000 வரை­யி­லான அப­ரா­தம் தனித்தோ அல்­லது சிறைத் தண்­ட­னை­யு­டன் சேர்த்தோ விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­மம் இன்றி பண­ம­ளிப்பு வர்த்­த­கம் செய்­தால் $125,000 வரை­யி­லான அப­ரா­தம், மூன்­றாண்டு வரை­யி­லான சிறை ஆகிய தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.

பொது­மக்­கள் தங்­க­ளது வங்­கிக் கணக்­கு­க­ளை­யும் கைபே­சி­

க­ளை­யும் பயன்­ப­டுத்த யாரா­வது வேண்­டு­கோள் விடுத்­தால் அதனை ஏற்­க­வேண்­டாம் என்­றும் அவற்­றைப் பயன்­ப­டுத்தி நடை­பெ­றும் குற்­றங்­

க­ளுக்கு வங்­கிக் கணக்கு மற்­றும் கைபே­சிக்கு உரி­ய­வர்­களே தண்­ட­னைக்கு ஆளா­வார்­கள் என்­றும் காவல்­துறை தனது அறிக்­கை­யில் தெரிவித்து உள்­ளது.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற மோச­டிச் சம்­ப­வங்­களில் $633.30 மில்­லி­யனை பொது­மக்­கள் இழந்­த­னர்.

இது, 2020ஆம் ஆண்­டைக் காட்­ டி­லும் கிட்­டத்­தட்ட இரண்­டரை மடங்கு அதி­கம்.

அந்த ஆண்­டில் ஏமாற்­றப்­பட்ட தொகை $268.4 மில்­லி­யன்.

சிங்­கப்­பூ­ரில் நிக­ழும் மோச­டிச் சம்­ப­வங்­களில் 90 விழுக்­காடு வெளி­நா­டு­களில் இருந்து இயக்­கப்­ப­டு­பவை.

மொத்த மோச­டிச் சம்­ப­வங்­களில் பெரும்­பா­லா­னவை வேலை மோசடி, இணைய ஊடு­ரு­வல், முத­லீட்டு மோசடி ஆகி­யன என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

எளி­தான, வீட்­டி­லி­ருந்து செய்­யப்­படும் வேலைக்கு அதிக ஊதி­யம் தரு­வ­தா­கப் பொய் கூறி பணம் கரந்து மோசடி செய்­தல், பிர­பல நிறு­வ­னத்­தில் இருந்து பேசு­வ­தாக பாசாங்கு செய்து வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைப் பெற்று, அந்­தக் கணக்­கில் ஊடு­ரு­விப் பணத்­தைத் திரு­டு­தல் போன்­றவை அதி­க­மாக நிக­ழும் மோச­டிச் சம்­ப­வங்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!