பாடாங் திட­லைப் போற்­றிப் பாது­காப்­போம்

முர­சொலி

பாடாங் என அழைக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய திடல், சிங்­கப்­பூ­ரின் 75வது தேசிய சின்­ன­மாக இந்த ஆண்டு தேசிய தினத்­தன்று அறி­விக்­கப்­பட்டு உள்ளது. சிங்­கப்­பூ­ரின் மத்­திய வட்­டா­ரத்­தின் மையத்தில் 4.3 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் ஆறு காற்­பந்­துத் திடல்கள் அள­வில் அது அமைந்­துள்­ளது.

இங்­கு­தான் இரு பிர­பலமான விளை­யாட்டுச் சங்கங்­க­ளான சிங்­கப்­பூர் கிரிக்­கெட் கிளப் மற்­றும் சிங்­கப்­பூர் ரிக்­கி­ரி­யே­ஷன் கிளப் ஆகிய இரண்­டும் உள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய அங்­கீ­கா­ர­மாக விளங்கும் தேசிய சின்­னங்­கள் பட்­டி­ய­லில் முதல் முறை­யாக திறந்­த­வெளி பச்­சைப் புல்­த­ரை­யான பாடாங் திடல் இடம்­பெற்­றுள்­ளது என்று தேசிய மர­பு­டைமை வாரி­யம் கூறி­யுள்­ளது.

இந்த அங்­கீ­கா­ரம் அதற்கு முற்­றி­லும் பொருத்­த­மா­னது என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

சிங்­கப்­பூர் வர­லாற்­றில், 1800களி­லி­ருந்து தொடர் பயன்­பாட்­டில் இருந்­து­வ­ரும் பாடாங் திடல், மேல்தட்டு மக்­கள், சாதா­ரண மக்­கள் என இரு பிரி­வி­ன­ரும் பயன்படுத்தும் இட­மாக உள்­ளது.

கால­னித்­துவ ஆட்­சி­யின் மேல்­நிலை மக்­கள் விரும்பி விளை­யா­டும் கிரிக்­கெட்­டுடன் சாதா­ரண மக்­களை அதி­கம் ஈர்க்­கும் காற்­பந்து, ரக்பி போன்ற விளை­யாட்­டு­க­ளை­யும் அது கண்டு வந்­துள்­ளது.

சிங்­கப்­பூர் கிரிக்­கெட் கிளப்­பும் சரி, சிங்­கப்­பூர் ரிக்­கி­ரி­யே­ஷன் கிளப்­பும் சரி, நாட்டு மக்­க­ளின் விளையாட்டு உணர்­வு­களை இன்­று­வரை போற்றி வந்­துள்­ளன. கால­னித்­து­வ ஆட்­சிக்­கா­லத்­தில் அரச குடும்ப பிறந்த நாள் விழாக்­கள், வைப­வங்­கள், அரச குடும்ப முடி­சூட்டு விழாக்­கள் போன்ற அதி­கா­ர­பூர்வ கொண்­டாட்­டங்­க­ளுக்குப் பாடாங் திடல் ஒரு வச­தி­யான இட­மாக இருந்­தது.

பின்­னர், காலனித்­துவ ஆட்சிக்குத் தொடர்பில்லாத சீனப் புத்­தாண்டு, தைப்­பூ­சம், நபி­கள் நாய­கம் பிறந்த நாள் கொண்­டாட்­டங்­களும் இங்கு இடம்­பெ­றத் தொடங்­கின. சிங்­கப்­பூர் சமு­தா­யத்­து­டன் ஒன்­றிவிட்ட பாடாங் திடல், கால­னித்­துவ ஆட்­சிக்கு பின்­ன­ரும் தனது மகத்­து­வத்தை இழக்­க­வில்லை.

இங்­கு­தான், இந்­தி­யா­வின் சுதந்­தி­ரப் போராட்டத்­தலை­வர்­களில் ஒரு­வ­ரும் பல்லா­யி­ரக்கணக்­கான சிங்­கப்­பூர்-மலே­சிய இந்­தி­யர்­கள் இடம்­பெற்ற இந்­திய தேசிய ராணு­வத்தை (ஐஎன்ஏ) வழிநடத்­தி­ய­வ­ரு­மான நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ் தனது நாட்­டின் சுதந்­தி­ரத்­துக்­காக வீர­முழக்­கம் செய்­தார்.

அது மட்­டுமா, சிங்­கப்­பூரை ஆக்­கி­ர­மித்து இங்கு கொடுங்­கோல் ஆட்சி புரிந்து நாட்­டின் இருண்ட கால­மாக விளங்கி பொது­மக்­க­ளுக்கு ஆற்­றொணாத் துய­ரத்­தைத் தந்த ஜப்­பா­னிய ஆட்­சி­முறை முடிவுக்கு வந்த வெற்­றிப் பர­வ­சத்­தைக் கொண்­டா­டும் இட­மா­க­வும் பாடாங் திடல் விளங்­கி­யது.

பாடாங் திட­லின் முக்­கி­ய­வத்­து­வம் இத்­து­டன் நிற்­க­வில்லை. சிங்­கப்­பூர், மலே­சி­யா­வுடன் 1963ஆம் ஆண்டு இணைந்­த­போ­து அந்த அறி­விப்­பு நிகழ்ச்சியும் அங்கிருந்துதான் வந்தது.

சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு தொடங்கி, தொடக்க­கால தேசிய தின பேருரை, இளையர் விழாக்கள் போன்ற இளை­யர்­களைச் சிறப்­பிக்­கும் விழா நிகழ்­வு­களும் பாடாங் திடலை மக்­கள் மனதில் நீங்கா இடம்­பெறச் செய்­தன.

பல நாள் பயிற்சி, ஒத்­திகை என்று ராணு­வத்­தின் பல பிரி­வு­கள் உள்­பட, பள்ளி மாண­வர், ஊழியர்கள் என சமூ­கத்­தின் அனைத்து தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு பாடாங் திட­லைச் சுற்­றி­ வ­ரு­வதைக் காண்­பதே கண்­கொள்­ளாக் காட்சி.

அதுவும் பயிற்சி, ஒத்­திகை காலத்­தில் வாடிய முகத்­து­டன் கலந்­து­கொண்­டோர்கூட நகர மண்டபக் கட்­ட­டத்தில் கூடி­யுள்ள பிர­மு­கர்­கள், பொது­மக்­களை வீர­வ­ணக்­கத்­து­டன் தாண்­டிச் செல்­லும்போது தாங்கள் பட்ட சிரமத்தை மறந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத் ததைக் காண முடிந்தது.

கூடவே, பல்­வேறு கலா­சா­ரக் குழுக்­களும் ஒன்று­டன் ஒன்று போட்டி போட்­டுக்கொண்டு தங்­கள் திறனை வெளிப்­ப­டுத்த ஆர்­வ­மாய் ஆடிப் பாடி, மக்­கள் கர­வொலிக்கு இடையே செல்­வ­தும் பாடாங் திட­லுக்கே உரித்­தான ஒன்று.

இதே­போல் மாணவ மணி­கள் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் இளை­யர் விழா அணி­வ­குப்­புக்குப் பாடாங் திட­லில் விடி­யாற்­காலை முதல் விழா ஆரம்­பிக்­கும்வரை சில மணி­நே­ரம் காத்­தி­ருந்த சிர­மத்­தை­யும் மறந்து பார்­வை­யா­ளர்­களின் மகிழ்ச்சி ஆர­வா­ரத்­து­க்கு இடையே சென்ற நிகழ்­வும் உண்டு.

சிங்­கப்­பூ­ரின் தொடக்ககால தேசிய தினப் பேருரையும் பாடாங் திட­லில்­தான் நிகழ்ந்­தது. காலனித்­துவ ஆட்சி முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, புதி­தாக அமைந்­த உள்­நாட்டு அரசு என்­னென்ன திட்­டங்­களை வைத்­துள்­ளது என்ற எதிர்­பார்ப்­பு­டன் மக்­கள் அந்தப் பேரு­ரை­யைக் கேட்க ஆவ­லு­டன் காத்­தி­ருப்­பர், பாடாங் திடலில் அமர்ந்தவாறே.

இவை அனைத்தும் கூடி பாடாங் திடல் சிங்­கப்­பூர் வர­லாற்­றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இவ்வ­ளவு சிறப்­பு­களைத் தாங்கி நிற்­கும் பாடாங் திடலைக் காலந்­தோ­றும் நம் நினை­வில் நிறுத்­திக்கொள்­வதோடு நில்லாமல் அதை வாழும் மர­பு­டைமை இட­மா­க­வும் பாது­காக்க வேண்­டும்.

இதைச் செய்ய, பாடாங் திட­லில் நடை­பெ­றும் நிகழ்வுகளில் சாதா­ரண சிங்­கப்­பூ­ரர்­களும் அடிக்­கடி வந்து கலந்­து­கொள்­ளும் இட­மாக அதை வைத்­திருப்­பது அவ­சி­யம்.

பாடாங் திடல் என்­றுமே ஒரு துடிப்­பான விளை­யாட்டு மைதா­ன­மாக இருந்து வந்­துள்­ளது. அது தொடர வேண்­டும். அந்த இடத்தை பள்ளி மாண­வர்­க­ளுக்­கு அறி­மு­கப்­ப­டுத்­தும் அதே வேளை­யில் அது தந்த அனு­ப­வங்­கள் பற்­றி­யும் அவர்­க­ளுக்கு புரிய வைக்க வேண்டும்.

பாடாங் திட­லுக்கு எதி­ராக உள்ள நகர மண்டபக் கட்­ட­டம், அதில் ஒரு காலம் அமைந்­தி­ருந்த அரசின் அமைச்­சு­கள், அரு­கி­லுள்ள முந்­திய உச்ச நீதி­மன்­றக் கட்­ட­டம், அதை­ய­டுத்து உள்ள நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் என நவீன சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றையே மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­ற­லாம்.

பாடாங் தேசிய மரபுடைமை ஆக்கப்பட்டு இருப்பது இதற்கெல்லாம் வகை செய்யும்.

இந்­நி­லை­யில், அடுத்த ஆண்டு தேசிய தின ராணுவ மரி­யாதை அணி­வ­குப்பு இங்கு நடை­பெறும் என்று தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென் அறி­வித்­து­ள்ளது, சமூ­கத்திலும் அரசி­ய­லி­லும் பாடாங் திடல் பெற்றிருக்கும் தனிச்­சி­றப்­பைக் காட்டு­கிறது.

பாடாங் திட­லுக்கு எதிரே பிரம்­மாண்­ட­மா­கக் காட்சி தரும் நக­ர மண்டபக் கட்­ட­டம் மத்திய வட்டாரத்தின் முக்கிய அடையாளம் என்றால், அதற்கு எதிரே உள்ள பாடாங் திடல் அதற்குச் சற்­றும் குறை­வில்லாத சிறப்­பு­டன் தேசிய சின்­ன­மாக விளங்கு­கிறது.

அதை என்­றென்­றும் போற்­றிப் பாது­காப்­போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!