கிம் மோ வட்டாரத்தில் மரம் ஒன்று விழுந்தததில் மூவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
உலு பாண்டான் சமூக மன்றத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று நேற்று மாலை விழுந்தது. இருவர் மரத்தின் கீழ் சிக்கிக்கொண்டனர். மூன்றாவது நபர் விழுந்த மரத்துக்கு அருகே காணப்பட்டார். மூவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை கூறியது.
ஒரு சரிவான பகுதியில் மரம் விழுந்திருந்ததால், காயமடைந்தவர்களை மீட்க குடிமை தற்காப்பு படை வீரர்கள் அடர்ந்த புல் வெளியை கடந்து செல்லவேண்டியிருந்ததாக படை குறிப்பிட்டது.
மரம் எவ்வாறு விழுந்தது என்று தெரியவில்லை என்று சமூக மன்றம் கூறியது.

