மலாய் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது

மலாய் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது

1 mins read
56595ef3-44ee-4ef6-a9d8-9adcd1f1d4ed
அல்-முட்டாக்கின் பள்ளிவாசலைப் பிரதமர் லீ சியன் லூங் பார்வைட்டபோது. படம்: தகவல் தொடர்பு அமைச்சு -

சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் கடந்த பல ஆண்டுகளாகச் சமூக-பொருளியல் ரீதியாக முன்னேறி வந்துள்ளது என்றும் தனித்துவமான, தன்னம்பிக்கையான அடையாளத்தையும் உருவாக்கி நமது பல்லின சமூகத்துடன் ஆழமாக ஒன்றிணைந்துள்ளது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் தேசிய தின பேரணியின்போது மலாய் மொழியில் முதலில் பேசினார் பிரதமர்.

வலுவான மீள்திறன்மிக்க மலாய்/முஸ்லிம் சமூகம் வலுவான மீள்திறன்மிக்க சிங்கப்பூருக்கும் வழிவகுக்கும் என்ற அவர் கடந்த பல ஆண்டுகளாக மலாய்/முஸ்லிம் சமூகத்தின் முயற்சிகளை அரசு ஆதரித்து வந்துள்ளது என்றும் சுட்டினார். அரசு தொடர்ந்து தன் ஆதரவைக் கொடுக்கும் என்றும் அவர் சொன்னார்.