மூப்படையும் சமூகம்; அதிகரிக்கும் ஜிஎஸ்டி

மூப்படையும் சமூகம்; அதிகரிக்கும் ஜிஎஸ்டி

1 mins read
d66a0d43-99df-4080-8216-21f70b526c91
-

ஆறு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேலானவர். 2030க்குள் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேலானவராக இருப்பார் என்றும் மூப்படையும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

மூத்த சிங்கப்பூரர்களுக்குச் சுகாதார செலவுகளைக் கட்டுப்படியாக வைத்திருக்க மருந்துகளுக்கு மானியங்கள் வழங்கப்படும். அதோடு கூடுதல் மருத்துவமனைகள்,பலதுறை மருந்தகங்கள், சுகாதார வசதிகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

இதனால் சுகாதார, சமூக செலவினம் உயரும். குறைந்த வருமான குடும்பங்கள், மூத்தோரின் சுகாதாரத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு நாம் எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் லீ சியன் லூங் இன்று(ஆகஸ்ட் 21) தேசிய தின பேரணியின்போது தாம் ஆற்றிய சீன உரையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.