கொவிட்-19 எதிரான போராட்டத்தில் பங்களித்தவர்களுக்கு சிறப்பு விருது

கொவிட்-19 எதிரான போராட்டத்தில் பங்களித்தவர்களுக்கு சிறப்பு விருது

1 mins read
164d1bd4-cbd0-421f-a319-38c2e11eb462
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

கொவிட்-19 எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

கொவிட்-19 மீள்திறன் பதக்கம் என்றழைக்கப்படும் விருது தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் அளிக்கப்படும். இதோடு கிருமித் தொற்று காலக்கட்டத்தில் சிறப்பான சேவை வழங்கியவர்களுக்கு பாராட்டுப் பதக்கம், பொது சேவை பதக்கம், பொது நிர்வாகப் பதக்கம் ஆகிய தேசிய விருதுகள் வழங்கப்படும்.

விருதுகளில் சிறப்பு அடையாளங்கள் இருக்கும் என்று பிரதமர் லீ தம்முடைய தேசிய தின பேரணியின் ஆங்கில உரையில் கூறினார். விருது பெற்றவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பணியாற்றியதை இது குறிக்கும்.

இவ்வாண்டு இறுதியில் விருது பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். விருது நிகழ்ச்சி அடுத்தாண்டு நடைபெறும்.