உள்ளிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

உள்ளிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

1 mins read
ab367c1b-a326-4466-a2b2-7e866c1d4157
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலைமை சீரடைந்துவரும் நிலையில் , முகக்கவசம் குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படும். பொது போக்குவரத்து, மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்ற சுகாதார இடங்களில் மட்டுமே முகக்கவசங்கள் அணியப்படவேண்டும்.

மற்ற உள்ளிடங்கள், வெளிப்புறங்கள் ஆகியவற்றில் முகக்கவசங்கள் அணிவது கட்டயாம் இல்லை.

பள்ளிகளில் முகக்கவசங்கள் அணிய இனி தேவையில்லை. ஆசிரியர்களின் முகப்பாவங்களை மாணவர்கள் பார்ப்பது முக்கியம் என்றார் பிரதமர். இது மாணவர்களின் கற்றலுக்கும் மேம்பாட்டுக்கும் முக்கியம் என்று தம்முடைய தேசிய தின பேரணியின் ஆங்கில உரையில் திரு லீ விவரித்தார்.

இது எப்போது அமலாக்கப்படும் என்ற விவரங்கள் அமைச்சர்நிலைப் பணிக்குழு கூடியவிரைவில் அறிவிக்கும் என்று பிரதமர் கூறினார்.