கொவிட்-19 காலத்தில் முதியோர் நலன் காத்த திருவாட்டி ருக்கு

கொவிட்-19 காலத்தில் முதியோர் நலன் காத்த திருவாட்டி ருக்கு

2 mins read
3ac5ed60-9528-4b8e-9a66-68ee6ecfb9e4
திருவாட்டி ருக்கு பக்கிரிசாமி, 72. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

மோன­லிசா

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கால­கட்­டத்­தில் வெளியே அதி­கம் செல்ல முடி­யாத நிலை­யில் தம் அண்­டை­வீ­டு­களில் வசிக்­கும் முதி­ய­வர்­கள் பலர், கவ­லை­யு­டன் காணப்­பட்­டதை ஈசூன் குடி­யி­ருப்­பா­ளர் ருக்கு பக்­கி­ரி­சாமி கவ­னித்­தார். அவர்­களை மகிழ்­விக்க அவர்­க­ளுக்­காக உணவு சமைத்­துக் கொடுத்­தார். நேற்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் 72 வயது திரு­வாட்டி ருக்கு பக்­கி­ரி­சா­மி­யின் தன்­ன­ல­மற்ற செய­லைப் பாராட்­டி­னார்.

மறைந்த முன்­னாள் பிர­த­மர் லீ குவான் இயூவை சிறு­வ­ய­தி­லி­ருந்தே முன்­மா­தி­ரி­யா­கக் கரு­திய திரு­வாட்டி ருக்கு, தம் பெயரை திரு லீ குவான் இயூ­வின் மக­னான பிர­த­மர் லீ சியன் லூங் பேரணி உரை­யில் குறிப்­பிட்­டது பெரு­மை­ய­ளிப்­ப­தா­கக் கூறி­னார். 'சீஓபீ' என்று இன்று அழைக்­கப்­படும் சுற்­றுக்­கா­வல் பணி­யில் குடி­மக்­கள் பங்­கேற்­கும் திட்­டத்­தில் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு தம் அண்­ணன் பணி­யாற்­றிக்­ கொண்­டி­ருந்­த­போது முன்­னாள் பிர­த­மர் லீ குவான் இயூவை சந்­திக்க ருக்­கு­விற்கு வாய்ப்பு கிடைத்­தது.

சிங்­கப்­பூ­ரின் நான்கு இனத்து குழந்­தை­களும் கலந்­து­கொள்ள புக்­கிட் மேரா சமூக மன்­றத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஒரு விருந்து நிகழ்ச்­சி­யில், தமிழ் இன குழந்­தை­க­ளைப் பிர­தி­நி­தித்த 7 வயது ருக்­கு­விற்கு அன்­றைய பிர­த­ம­ரான லீ குவான் இயூ கைகொ­டுத்து வாழ்த்­துக் கூறி­யது மறக்க முடி­யாத தரு­ண­மென ருக்கு நினை­வு­கூர்ந்­தார்.

திரு லீ குவான் இயூவை ஓர் அண்­ணன் போல் கருதி தம் உயி­ருக்கு நிக­ரா­கப் பார்த்த ருக்­கு­விற்கு, அன்று நாட்­டிற்­காக தான் ஏதா­வது செய்­ய­வேண்­டும் என்ற ஆசை பிறந்­தது.

நேற்று பிர­த­மர் தம் பெயரை உரை­யின்­போது குறிப்­பிட்­ட­போது சமு­தா­யத்­திற்­குத் தாம் பய­னுள்ள வகை­யில் பங்­காற்­றி­யி­ருக்­கும் மன­நி­றை­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் தாம் பெற்­ற­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.